குறுந்தகடுகள் விற்பனைக்கு

குறுந்தகடுகள்:

சான்றிதழ்க் கல்வி கீழ்க்காணும் மூன்று நிலைகளை உடையது.

  • அடிப்படைநிலை (1,2 வகுப்புகள்)
  • இடைநிலை (3,4 வகுப்புகள்)
  • மேல்நிலை (5,6 வகுப்புகள்)

1 முதல் 6 ஆம் வகுப்பு வரையில் வழங்கும் தமிழ்க் கல்விப் பாடத்திட்டத்தைத் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைய வழியாக வழங்குகிறது. இந்தப் பாடத்திட்டங்கள் பல்லூடக வசதியுடன் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றைக் குறுந்தகடு (CD) வடிவிலும் விற்பனை செய்கிறோம். விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

வன்தகடுகள் :

தமிழ் கற்போம் - பேராசிரியர் மா.நன்னன்

தமிழை அடிப்படை நிலையிலிருந்து கற்பதற்கான முயற்சிகளுக்கு உதவும் வகையில் த.இ.க. இணைய வகுப்பறைகளைப் பயன்படுத்துகிறது. அதற்கான விரிவுரைகளைப் பதிவு செய்து இணையத்தளத்தில் இட்டுள்ளது. அப்படிப்பட்டவர்களுக்காக, இந்த வன்தகட்டில் வாய்மொழிப் பயிற்சி, எழுத்துப் பயிற்சிகளைப் பேராசிரியர் மா.நன்னன் அவர்கள் தமிழ் கற்போம் என்ற தலைப்பில் 39 இணைய வகுப்புகளாக வழங்கியிருக்கிறார்.

Learn Tamil - பேராசிரியர் முனைவர் தி.ப.சித்தலிங்கய்யா

தமிழை அடிப்படை நிலையிலிருந்து கற்பதற்கான முயற்சிகளுக்கு உதவும் வகையில் த.இ.க. இணைய வகுப்பறைகளைப் பயன்படுத்துகிறது. அதற்கான விரிவுரைகளைப் பதிவு செய்து இணையத்தளத்தில் இட்டுள்ளது. தமிழிறியாத வெளிநாடுவாழ் தமிழர்களுக்காவும், தமிழ் கற்க விரும்பும் பிற மொழியினருக்காவும் இந்த வன்தகட்டில் எழுத்துப்பயிற்சி, இலக்கணப் பயிற்சி, மொழிப் பயிற்சி ஆகியவை Learn Tamil என்ற தலைப்பில் ஆங்கில மொழிவழியாக அளிக்கப்பட்டு வருகின்றன. பேராசிரியர் முனைவர் தி.ப.சித்தலிங்கய்யா அவர்கள் இந்த இணைய வகுப்புகளை நடத்தி இருக்கிறார்.

கலைச்சொல் பேரகராதி

தமிழக அரசு 2000-ஆம் ஆண்டில் கலைச்சொல்லாக்கத் திட்டத்தினை விரிவாக வகுத்து, கலைச்சொற்களை உருவாக்கும் பணியைப் பதினான்கு பல்கலைக்கழகங்களுக்குப் பகிர்ந்தளித்தது. பல்கலைக்கழகங்கள் திரட்டித் தந்த கலைச்சொற்களைச் சீராய்வு செய்து, பதிப்பித்து, பதினான்கு தொகுதிகளாய் வெளியிட்டுள்ளது தமிழ் இணையக் கல்விக்கழகம் (முந்தைய தமிழ் இணையப் பல்கலைக்கழகம்). தற்போது இது குறுந்தகடு வடிவில், தேடுதல் வசதியுடன் தரப்பட்டுள்ளது.

 
இந்தியா
மற்ற நாடுகளில்
மழலையர்கல்வி
- ` 100 (தபால் செலவு தனி)
- US. $ 5 (தபால் செலவு தனி)
அடிப்படைநிலை
- ` 100 (தபால் செலவு தனி)
- US. $ 5 (தபால் செலவு தனி)
இடைநிலை
- ` 100 (தபால் செலவு தனி)
- US. $ 5 (தபால் செலவு தனி)
மேல்நிலை
- ` 100 (தபால் செலவு தனி)
- US. $ 5 (தபால் செலவு தனி)
திருக்குறள்
- ` 100 (தபால் செலவு தனி)
- US. $ 5 (தபால் செலவு தனி)
தமிழ் கற்போம்
- ` 150 (தபால் செலவு தனி)
- US. $ 5 (தபால் செலவு தனி)
Learn Tamil
- ` 150 (தபால் செலவு தனி)
- US. $ 5 (தபால் செலவு தனி)
கலைச்சொல் பேரகராதி
- ` 300 (தபால் செலவு தனி)
- US. $ 10 (தபால் செலவு தனி)

இந்தக் குறுந்தகடு மற்றும் வன்தகட்டைப் வாங்க விரும்புவோர். அதற்கான தொகையையும் தபால் செலவையும் சேர்த்து Tamil Virtual Academy என்ற பெயரில் வரைவோலை (DD) எடுத்து அனுப்பிவைக்கலாம். அல்லது நேரிலும் வந்து வாங்கிக்கொள்ளலாம்.

 
மழலையர்கல்வி
Primer Course
Basic Level
அடிப்படைநிலை
இடைநிலை
Intermediate Level
மேல்நிலை
Advance Level
தமிழ் கற்போம்
Tamil Karpom
Learn Tamil
கலைச்சொல் பேரகராதி
Technical Glossary
திருக்குறள்
Tirukural