-
உலகளாவிய
தமிழ்ச் சமுதாயத்தினர்க்கும், தமிழியலில் ஈடுபாடுள்ள மற்றையோர்க்கும்
தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு பற்றிய கல்விச் சாதனங்களை உருவாக்கி
இணையம் வழியாக அளித்தல்.
-
பார்
தழுவி வாழும் தமிழர்கட்கு, அவர்கள் தேவைக்கேற்பப் பாடத் திட்டங்களை
உருவாக்கி அளித்தல்: அவர்கள் தங்கள் பாரம்பரியத்தோடு தொடர்புகொண்டு
வாழத் துணைபுரிதல்.
-
உலகின்
பல நாடுகளில் வாழும் தமிழர்கள் உருவாக்கும் கல்வியறிவுச் சாதனங்களைத்
தொகுத்து, அவற்றைப் பரவலாகத் தமிழ் மக்களுக்கு வழங்கும் முயற்சிகளைத்
தொடர்ந்து மேற்கொள்ளுதல்.
-
தமிழ்மொழி,
இலக்கியம், பண்பாடு தொடர்பான பாடத் திட்டங்களை வகுத்தல்:
கேள்வியறிவுக்காகவோ, அல்லது சான்றிதழ், பட்டயம், பட்டம் பெறுவதற்காகவோ
கற்போருக்கு இப்பாடங்களைக் கற்க வாய்ப்பளித்தல்: உரிய நியமங்களை
நிறைவு செய்தோருக்கு, அவர்கள் கற்ற பாடங்களின் தகுதிக்கு ஏற்ப,
தஞ்சை, தமிழ்ப் பல்கலைக்கழகம் வழியாகச் சான்றிதழ்/பட்டயம்/பட்டம்
வழங்க ஏற்பாடு செய்தல்.
|