பட்டயப் படிப்பிற்கான பாடப் பொருள்/Diploma Courses Syllabus

பட்டயப் படிப்பிற்கான அத்தனைப் பாடங்களும் இணைய வழிப்பல்லூடக வசதிகளைப் பயன்படுத்தி வழங்கப்படுகின்றன. இப்பாடப் பொருள்கள் தாள் வாரியாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பாடத்திட்டத்திற்கான பாடங்கள் / Lessons Based on Syllabus

C011

இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர் இருவர்

C012

இடைக்கால இலக்கியம்

C021

இலக்கணம் - 1 (எழுத்து)

C031

தமிழகப் பண்பாட்டு வரலாறு

C011 இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர் இருவர்

பாரதியார் கவிதை உலகம் - 1

பாரதியாரின் வாழ்க்கைச் சித்திரம்: பாரதியாரின் தேசியப் பாடல்கள்; பாரதியாரின் தெய்வப் பாடல்கள்; பாரதியாரின் முப்பெரும் பாடல்கள்; பாரதியார் பாடல்களில் சமுதாய நோக்கு; பாரதியார் பாடல்களில் பெண்ணியச் சிந்தனைகள்

பாரதியார் கவிதை உலகம் - 2

பாரதியாரும் தமிழும்; பாரதியாரும் இந்திய விடுதலை இயக்கமும்; பாரதியாரின் உலகளாவிய நோக்கு; பாரதியாரின் படைப்புகளில் அறிவியல் கூறுகள்; தமிழ்க் கவிதை வரலாற்றில் பாரதி யுகம்; பாரதியார் வாழ்கிறார்

பாரதிதாசன் கவிதை உலகம் - 1

பாரதிதாசன் ஓர் அறிமுகம்; பாரதிதாசனின் சமுதாயம்; பாரதிதாசன் கண்ட பெண் உலகம்; பாரதிதாசனின் பகுத்தறிவுப் பார்வை; பாரதிதாசன் பார்வையில் குடும்பம் - 1; பாரதிதாசன் பார்வையில் குடும்பம் - 2

பாரதிதாசன் கவிதை உலகம் - 2

பாரதிதாசனின் தமிழ் உணர்வு; பாரதிதாசன் கண்ட இயற்கை; பாரதிதாசனின் காப்பியங்கள்; பாரதிதாசனின் இசைப் பாடல்கள்; பாரதிதாசனின் நாடகங்கள்; பாரதிதாசன் வாழ்கிறார்

C012 இடைக்கால இலக்கியம்

அறநூல்கள் - 1 (கீழ்க்கணக்கில் அறம்-திருக்குறள் நீங்கலாக)

நாலடியார்; நான்மணிக் கடிகை; திரிகடுகம், சிறுபஞ்ச மூலம், ஏலாதி; இன்னா நாற்பது, இனியவை நாற்பது; ஆசாரக் கோவை, முதுமொழிக் காஞ்சி; பழமொழி நானூறு

அறநூல்கள் - 2 (ஏனைய அறநூல்கள்)

பிற்கால அற நூல்கள் - பொது அறிமுகம்; ஆத்தி சூடியும் கொன்றை வேந்தனும்; மூதுரையும் நல்வழியும்; வெற்றி வேற்கையும் உலகநீதியும் ; நீதிநெறி விளக்கம்; நன்னெறி

சிற்றிலக்கியங்கள் - 1 (அக இலக்கியங்கள்)

சிற்றிலக்கியம் - ஓர் அறிமுகம்; தூது இலக்கியம்; குறவஞ்சி இலக்கியம்; கலம்பக இலக்கியம்; மடல் இலக்கியம்; கோவை இலக்கியம்

சிற்றிலக்கியங்கள் - 2 (புற இலக்கியங்கள்)

பரணி இலக்கியம்; பிள்ளைத்தமிழ் இலக்கியம்; பள்ளு இலக்கியம்; உலா இலக்கியம்; சதக இலக்கியம்; அந்தாதி இலக்கியம்

C021 இலக்கணம் - 1 (எழுத்து)

மொழி அமைப்பு

தமிழ் இலக்கண அறிமுகம் - எழுத்து, சொல்; தமிழ் இலக்கண அறிமுகம் - பொருள், யாப்பு, அணி; எழுத்து இலக்கணத்தின் அமைப்பு; சார்பு எழுத்துகள்; மொழி முதல் மொழி இறுதி எழுத்துகள்; மெய்ம்மயக்கம்

எழுத்தின் பிறப்பும் பத இலக்கணமும்

எழுத்துகளின் பிறப்பு - பொது அறிமுகம்; உயிரெழுத்துக்களின் பிறப்பு; மெய்யெழுத்துகளின் பிறப்பு; பதம் - பொது அறிமுகம்; பகாப்பதமும் பகுபதமும் - பகுதி 1; பகாப்பதமும் பகுபதமும் - பகுதி 2.

புணர்ச்சி - 1

புணர்ச்சியும் அதன் பாகுபாடும்; பொதுப்புணர்ச்சி; உயிர் ஈற்றுச் சிறப்புப் புணர்ச்சி; உயிர் ஈற்றுப் புணர்ச்சி - சிறப்பு விதிகள்; குற்றியலுகர ஈற்றுப் புணர்ச்சி - சிறப்பு விதிகள்; எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி.

புணர்ச்சி - 2

மெய் ஈற்றுப் புணர்ச்சி விதிகள் - I; மெய் ஈற்றுப் புணர்ச்சி விதிகள் - II; மெய் ஈற்றுப் புணர்ச்சி விதிகள் - III; உருபு புணர்ச்சி - I; உருபு புணர்ச்சி - II; இக்காலத் தமிழில் வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்.

C031 தமிழகப் பண்பாட்டு வரலாறு

பண்பாட்டு வரலாறு - 1

பண்பாடு ஒரு விளக்கம்; மொழியும் பண்பாடும்; தமிழ்நாடு - நில அமைப்பும் வரலாறும்; பண்பாட்டு வரலாற்றுச் சான்றுகள்; தமிழர் பண்பாட்டு அடிப்படைகள்; பழங்காலத் தமிழ்ப் பண்பாடு

பண்பாட்டு வரலாறு - 2

காப்பியங்கள் காட்டும் தமிழர் பண்பாடு; கலைகள் வளர்த்த பண்பாடு; அறநூல்கள் வளர்த்த பண்பாடு; சைவ வைணவச் சமயங்கள் வளர்த்த பண்பாடு; சமண பௌத்த சமயங்கள் வளர்த்த பண்பாடு; இசுலாம், கிறித்தவம் வளர்த்த பண்பாடு

பண்பாட்டு வரலாறு - 3

நாயக்கர் காலப் பண்பாடு; சிற்றிலக்கியங்கள் காட்டும் பண்பாடு; ஐரோப்பியர் காலப் பண்பாடு; விடுதலை இயக்கம் வளர்த்த பண்பாடு; நிகழ்காலப் பண்பாடு; தமிழர் பண்பாட்டின் மொத்தஉரு - கூட்டல்கள் கழித்தல்கள், மாற்றங்கள், நிலைபேறுகள்

காசும் கல்வெட்டும் காட்டும் பண்பாடு

காசும் கல்வெட்டும் - ஓர் அறிமுகம் ; அரசியலும் ஆட்சியும் ; கலையும் இலக்கியமும் ; சமயமும் வழிபாடும் ; வாழ்வியலும் சமுதாயமும் ; வேளாண்மையும் வணிகமும்