குழந்தைப் பேற்றின் சிறப்பினை வளையாபதி எவ்வாறு
எடுத்துரைக்கிறது?
பொறுமை இல்லாத அறிவு, காம இன்பம் அனுபவிக்காத
இளமை, படித்துறைகள் இல்லாத நீர்நிலைகள் (குளம்),
ஆடை இல்லாத தூய்மை (அழகு), மணம் இல்லாத மலர்
மாலை, தொடர்ந்து படிக்காத புலமை, காவல் அகழிகள்
இல்லாத நகரம் இவை போன்றதே குழந்தை இல்லாத
செல்வம் என்று கூறி, குழந்தைச் செல்வமே செல்வம்
என்பதை வளையாபதி சிறப்பிக்கிறது.
|