வளையாபதியின் இலக்கிய சிறப்பினைச் சான்றுடன்
எடுத்துரைக்க.
வளையாபதி ஆசிரியர் ஒரு நாட்டின் இயற்கை வளம் பற்றிக்
குறிப்பிடுகின்றபோது அங்குச் செந்நெல்லும், கரும்பும்
கமுகும் நிறைந்துள்ள காட்சியைக் காட்டுகிறார். இவை
மிகுந்த நீர்வளம் மிக்க பகுதியில் தான் வளரும். இதனைக்
கற்பனை நயம்படக் கவிச் சுவையுடன் தருகிறார் ஆசிரியர்.
அங்குச் செந்நெல், கரும்புடன் போட்டியிட்டுக் கொண்டு,
அதனினும் உயரமாக வளர்கிறது. கரும்பு கமுகுடன் போட்டி
போட்டுக் கொண்டு கமுகு வரை வளர்கிறது. இதனைக்
காணச் சகிக்காத கமுகு வானுற வளர்ந்து மேகத்தில்
முகத்தை மறைத்துக் கொள்கிறது’ என்கிறார். இந்தக் கற்பனை
ஆசிரியரின் இலக்கியச் சிறப்பிற்கு ஒரு முத்தாய்ப்பு.
|