தன்மதிப்பீடு : விடைகள் - I

3.

வாழ்க்கை என்பது பெரும் துன்பத்தில் சிறிது இன்பத்தைத் தேடுவதே என்பதைச் சூளாமணி எவ்வாறு சித்திரிக்கிறது?

சூளாமணி இதனை ஓர் உவமை வாயிலாக விளக்குகிறது. மதயானையிடமிருந்து தப்பிக்க முயலும் ஒருவன் ஒரு கொடியைப் பற்றிக் கொண்டு ஒரு பள்ளத்தில் தொங்குகிறான். பள்ளத்துக்குள்ளோ பாம்பு படமெடுத்து ஆடுகிறது. அவன் கீழே குதித்தால் பாம்பு கடித்து இறந்து விடுவான். மேலே சென்றால் யானை மிதித்துக் கொன்றுவிடும்; இத்தகைய இன்னல் மிக்க சூழலில் தேன் அடையிலிருந்து சிந்தும் ஒரு சொட்டுத் தேனைச் சுவைக்க முயற்சி செய்கிறான்.  இதைப் போன்றதுதான் மனித வாழ்க்கை என்கிறது சூளாமணி.

முன்