தமிழிலக்கியங்களுள் அளவாலும் தரத்தாலும் எண்ணிக்கையாலும் மிகுந்து நிற்பவை செய்யுள் அல்லது கவிதை இலக்கியங்களே. அவற்றுள்ளும் காப்பியங்கள் எனப்படும் தொடர்நிலைச் செய்யுள்கள் தனியிடம் பெறுகின்றன. பக்தி மொழி எனப் பாராட்டப்படும் தமிழில் பல்வேறு சமயங்களைச் சேர்ந்த காப்பியங்கள் உள்ளன. உலகப் பெருஞ்சமயங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் கிறித்துவம் சார்ந்த காப்பியங்கள் உள்ளன. அவை தமிழுக்குப் பெருமை சேர்க்கின்றன. அவற்றுள் தலைசிறந்த ஒன்றாக விளங்கும் இரட்சணிய யாத்திரிகத்தைப் பற்றிய செய்திகள் இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. |