இந்தப் பாடம், வீரமாமுனிவரைப் பற்றியும் அவரது
படைப்புகளைப் பற்றியும் குறிப்பிடுகிறது. தேம்பாவணி
காப்பியத்தின் அமைப்பை விளக்குகிறது. காப்பியத்தில்
இடம்பெறும்
கதை மாந்தர்கள் இயல்புகளைச் சுட்டுகிறது.
எந்த அளவுக்கு விவிலியத்தின் தாக்கம்
இக்காப்பியத்தில் உள்ளது என்பதையும் எடுத்துரைக்கிறது.
இறுதியாகக் காப்பியத்தின் இலக்கியத் திறனையும்,
தனிச்சிறப்புகளையும் விளக்குகிறது.
|