தன் மதிப்பீடு : விடைகள் - II
1) |
இயேசு காவியத்தில், இயேசுவின்
கொள்கையைக்
கண்ணதாசன் எவ்வாறு விளக்குகிறார்? ஓய்வு நாளைக் கடைப்பிடித்தல் போன்ற, சமய விதிகள் எல்லாம் மனிதர்களின் நலனுக்காகவே உருவாக்கப்பட்டன. விதிகளுக்காக மனிதர்கள் உருவாக்கப்படவில்லை என்பது இயேசுவின் கொள்கை. இதைக் கண்ணதாசன் குறிப்பிடுகிறார். |