இரட்சணிய யாத்திரிகம், தேம்பாவணி ஆகிய இரண்டும்
மக்களிடம் செல்வாக்குப் பெற்ற
காப்பியங்கள். இவ்விரண்டு காப்பியங்களைத் தவிரவும் வேறு பல கிறித்தவக்
காப்பியங்களும் படைக்கப்பெற்றுள்ளன.
அவற்றுள், திருவாக்குப் புராணம், கிறிஸ்து மான்மியம்,
திருஅவதாரம், சுடர்மணி, இயேசு காவியம் ஆகிய ஐந்து
காப்பியங்களைப் பற்றிய செய்திகளை இந்தப் பாடம்
கூறுகிறது. இதில் காப்பியங்களை இயற்றிய
ஆசிரியர்களைப் பற்றிய செய்திகளும், காப்பியங்களின்
அமைப்பும், காப்பியக் கதை மாந்தர்களின் இயல்பும்,
காப்பியங்களில் இடம்பெற்றுள்ள
விவிலியச் செய்திகளும்
கூறப்பட்டுள்ளன.
|