தன் மதிப்பீடு : விடைகள் - II
1) | மருத நிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியினை
விவரிக்க. மருத நிலத்தில் உழத்தியர் நாற்று நடுகின்றனர். முகத்தில் சேற்றுத் துளிகள் தெறிக்கின்றன. உழத்தியர் குரவை ஒலிக்கின்றனர். அவ் ஒலி விண்ணகத்தை எட்டுகிறது. விண்ணக மகளிர் உழத்தியரை நோக்கினர். அந்நோக்கத்தால் கண்ணேறு பட்டுவிடாதவாறு மதன் இட்ட திட்டிப் பொட்டு இச் சேற்றுத்துளிகள். |