தன் மதிப்பீடு : விடைகள் - II
3) |
மஹ்ஜபீன் - புனித பூமியிலே காப்பியத்தில் இடம்பெறும் வருணனையினை விளக்குக? மஹ்ஜபீனின் நினைவால் அஷ்ரபுக்கு இரவு தூக்கம் வரவில்லை. அந் நிலாக்கால இரவில் சந்திரன் ஒளியைத் தந்து குளிர் தந்தான். அது உலகு எங்கும் சுற்றுகின்ற நிலவு. அவன் இதயத்தில் உலவும் நிலவு பெண்நிலவு. வான் நிலவுக்குக் களங்கமுண்டு. ஆனால் அஷ்ரபின் இதயத்துள் உலவும் நிலவுக்குக் களங்கமில்லை. அது கருமேகமும் மூடாத நிலா, இன்ப உணர்வை வழங்கும் நிலா என வருணிக்கிறார். |