இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
ஆன்மிக ஆற்றலால் போரும் பூசலும் அற்ற உலகைப் படைக்கலாம் என்பதை இக்காப்பியம் காட்டுகிறது. போரும் பூசலுமற்ற சமுதாயத்தை உருவாக்குவதைத் தலையாய பணியாகக் கொண்டு சுத்தன் உழைப்பதை இக்காப்பியம் சுட்டுகிறது. நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் இடையே நிகழும் போரில் நல்லவர்கள் வெற்றி பெறுவதையும் தீயவர்கள் திருந்துவதையும் இதில் காணலாம். சமயோகம் என்னும் தத்துவத்தின்வழி இறை உணர்வையும் ஆன்மிக ஆற்றலையும் பெறலாம். உலகம் பயனுற வாழும் வாழ்க்கைக்கு அடித்தளமாகச் சமயோகம் அமைவதையும் இதனால் அறியலாம். |
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
|
|
|
|
|
|
|