6.0 பாட முன்னுரை |
இருபதாம் நூற்றாண்டில் பல குறுங்காப்பியங்கள் தமிழில் தோன்றியுள்ளன. அவற்றுள் மூன்று குறுங்காப்பியங்கள் இந்தப் பாடப் பகுதியில் இடம் பெறுகின்றன. அவையாவன: வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியாரின் அகலிகை வெண்பா, பாலபாரதி ச.து.சு.யோகியாரின் அகல்யா, கவிஞர். தமிழ் ஒளியின் வீராயி ஆகியவையாகும். இவற்றைப் பற்றிய செய்திகள் இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. |