பாடம் - 2
A02112 திணை, பால், எண், இடம்

E

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

திணை என்றால் ஒழுக்கம் அல்லது இனம் என்னும் கருத்தைத் தெரிவிக்கிறது. திணை, உயர்திணை அஃறிணை என்று இரண்டு வகைப்படும் என்பதை விளக்குகிறது. பால் என்றால் பிரிவு என்பதையும் எண் என்பது பொருள்களின் எண்ணிக்கையைக் குறிப்பது என்பதையும் குறிப்பிடுகிறது. பால் ஐந்து வகைப்படும், எண் இரண்டு வகைப்படும் என்பதை விளக்குகிறது. இடம் என்றால் என்ன என்னும் கருத்தையும் இடத்தின் வகைகளையும் விளக்குகிறது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • உயர்திணை, அஃறிணை ஆகியவற்றை உணர்ந்து கொள்ளலாம்.

  • ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் ஆகியவற்றைப் புரிந்து கொள்ளலாம்.

  • ஒருமை, பன்மை என்னும் பொருள்களின் எண்ணிக்கையை அறிந்து கொள்ளலாம்.

  • தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூவிடங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

பாட அமைப்பு