3.0 பாட முன்னுரை

மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கிறது. மனிதர் என்னும் சொல்லே நம்மைக் குறிக்கும் பெயராகத்தான் இருக்கிறது. மனிதர்களை உயர்திணையாக நாம் முந்தைய பாடத்தில் பார்த்தோம். அஃறிணையில் குறிக்கப்படும் உயிர் உள்ள பொருள்களுக்கும் உயிர் இல்லாத பொருள்களுக்கும் பெயர்கள் இருக்கின்றன. இவ்வாறு எல்லாப் பொருள்களையும் குறிப்பிடப் பயன்படும் பெயர்களைப் பற்றிய இலக்கணத்தை இந்தப் பாடத்தில் நாம் காண்போம்.