தன் மதிப்பீடு : விடைகள் - II
5. |
மூன்றாம்
வேற்றுமையில் வரும் சொல் உருபுகள் யாவை? சொல் உருபு என்பது வேற்றுமை உருபுக்குப் பதிலாக (மாற்றாக) வருவது. மூன்றாம் வேற்றுமையில், ‘ஆல்’ என்னும் வேற்றுமை உருபுக்குப் பதிலாகக் ‘கொண்டு’ என்னும் சொல்லுருபும், ஒடு, ஓடு என்னும் உருபுகளுக்குப் பதிலாக ‘உடன்’ என்ற சொல்லுருபும் வரும். எ.டு: ஊசியால் தைத்தான் என்பது ஊசி கொண்டு தைத்தான் எனவரும். அண்ணனோடு தங்கை வந்தாள் என்பது அண்ணனுடன் தங்கை வந்தாள் என வரும். |