வேற்றுமைத் தொகைப் புறத்துப்
பிறந்த அன்மொழித்
தொகை இரண்டாம் வேற்றுமைத் தொகை முதல் ஏழாம்
வேற்றுமைத் தொகை வரை சேர்த்து ஆறு வகைப்படும்.
(எ-டு) பூங்குழல் வந்தாள்
பூங்குழல் என்னும் இரண்டாம்
வேற்றுமை உருபும்
பயனும் உடன் தொக்கத் தொகைநிலைத் தொடர், ‘பூவையுடைய
குழலை உடையாள்’ என விரியும்போது இரண்டாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த
அன்மொழித் தொகை எனப்படும்.
(எ-டு) பொற்றொடி வந்தாள்
பொற்றொடி
என்னும் மூன்றாம் வேற்றுமை உருபும்
பயனும் உடன் தொக்க
தொகைநிலைத் தொடர்,
‘பொன்னாலாகிய தொடியினை உடையாள்’ என விரியும்போது மூன்றாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.
(எ-டு) கவியிலக்கணம்
கவியிலக்கணம்
என்னும் நான்காம் வேற்றுமைத்
தொகைநிலைத் தொடர், ‘கவிக்கு இலக்கணம் சொல்லப்பட்ட
நூல்’ என விரியும்போது, நான்காம் வேற்றுமைத் தொகைப்
புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.
(எ-டு) பொற்றாலி
பொற்றாலி என்னும் ஐந்தாம் வேற்றுமை உருபும்
பயனும்
உடன் தொக்கத் தொகைநிலைத் தொடர், ‘பொன்னின் ஆகிய தாலியினை உடையாள்’
என விரியும்போது, ஐந்தாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.
(எ-டு) கிள்ளிகுடி
கிள்ளிகுடி என்னும் ஆறாம் வேற்றுமைத்
தொகைநிலைத்
தொடர், ‘கிள்ளியினது குடியிருக்கும் ஊர்’ என விரியும் போது, ஆறாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்
தொகை எனப்படும்.
(எ-டு) கீழ் வயிற்றுக் கழலை
கீழ் வயிற்றுக் கழலை என்னும் ஏழாம் வேற்றுமை உருபும்
பயனும் உடன் தொக்கத்தொகை நிலைத் தொடர், ‘கீழ் வயிற்றின்
கண் எழுந்த கழலையைப் போன்றவன்’ என விரியும்போது,
ஏழாம் வேற்றுமைத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்
தொகை எனப்படும்.
|