3.6
உரிச் சொற்றொடர் |
|
|
உரிச்சொற்கள் பெயர் அல்லது வினைச்சொற்களுக்கு அடையாய் நின்று தொடர வருவது உரிச்சொற்றொடர் எனப்படும். உரிச்சொல்லைப் பற்றிய செய்திகள் முந்தைய பாடத்தில் கூறப்பட்டன. அவற்றை நினைவு கொள்க.
- இசையும் குறிப்பும் பண்பும் ஆகிய
பல்வேறுபட்ட
குணங்களை இசை, ஓசை, குறிப்பு என்பன மனத்தினால் உணரப்படுவன. பண்பு ஐம்பொறிகளால் உணரப்படுவது. (எ.டு) சால, உறு, தவ, நனி, கூர், கழி - மிகுதி என்னும் ஒரு குணம் குறித்தது.
கடி - காப்பு, கூர்மை, நாற்றம், அச்சம் முதலிய பல குணம்
குறித்தது. (எ.டு) தடக்கை - பெயர்க்கு அடையாக வந்தது. நனி வருந்தினான் - வினைக்கு அடையாக வந்தது. “வாரணம் பொருத மார்பு” - இதில் வாரணம் என்பது யானையைக் குறித்துச் செய்யுளில் வழங்கி வந்துள்ள சொல் ஆகும்.
பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி |