தொடர்களை வினையெச்சத் தொடர், பெயரெச்சத் தொடர்,
எழுவாய்த் தொடர் எனப் பிரிப்பது போல வினாத்தொடர்,
விடைத் தொடர் என்றும் பிரிக்கலாம்.
இவ்வாறு
பிரிப்பது பேச்சு வழக்கு, செய்யுள் வழக்கு இரண்டிற்கும்
பொதுவானது.
செய்யுளில் இடம்பெறும்
தொடர்களைப் பொருள்
கொள்வதற்கான வழிமுறைகளைக் குறிப்பிடுவது,
பொருள்கோள் என்பதாகும். தமிழில் செய்யுள் தொடர்களைப்
பொருள் கொள்வதற்கும், உரைநடைத் தொடர்களைப் பொருள்
கொள்வதற்கும் வேறுபாடு உள்ளது. உரைநடை
என்பது
தொடர் அமைப்பில் பேச்சு வழக்கோடு
நெருங்கிய
தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது. |