5.1 வினா
|
|||||||||||||||||||||||||||||
தாம் எதிர்பார்க்கும் கருத்தைப் பெறுவதற்கு ஒருவரிடம் எவ்வாறு வினவ வேண்டும் என்பதை விளக்குவது வினாப்பகுதி. வினா ஆறு வகைப்படும். அவை,
1) அறிவினா என்பனவாகும். ஒரு வினா, யாரிடம் யார் வினவுவது என்பதைப் பொருத்து வேறுவகையாக மாற்றம் பெறும் என்பது கவனிக்கத்தக்கது. இதனை விரிவாக வினா வகைகளை விளக்கும்போது காணலாம்.
அறிவறி யாமை ஐயுறல் கொளல்கொடை |
|||||||||||||||||||||||||||||
5.1.1 அறிவினா |
|||||||||||||||||||||||||||||
விடையை நன்கு அறிந்த ஒருவர், மற்றவர்க்கு அந்த விடை தெரிந்திருக்கிறதா என்பதைக் கண்டறிய வினவும் வினா அறிவினா எனப்படும்.
எ-டு: திருக்குறளை எழுதியவர் யார்? |
|||||||||||||||||||||||||||||
5.1.2 அறியாவினா
|
|||||||||||||||||||||||||||||
தெரியாத ஒரு கருத்தைத் தெரிந்து கொள்வதற்காக, அக்கருத்தை நன்கு அறிந்த ஒருவரிடம் வினவி அறிதல் அறியாவினா எனப்படும்.
எ-டு: திருக்குறளை எழுதியவர் யார்? |
|||||||||||||||||||||||||||||
5.1.3 ஐயவினா |
|||||||||||||||||||||||||||||
இதுவா அதுவா எனத் தெளிய முடியாத நிலையில் ஒரு பொருளை ஐயுற்று வினவும் வினா ஐயவினா எனப்படும். எ-டு: அங்கே கிடப்பது பாம்பா? கயிறா? இவ்வெடுத்துக்காட்டில் கிடப்பது ஒரு பொருள்
எனத்
தெரிகிறது. ஆனால், அது பாம்பு போலவும் தெரிகிறது. கயிறு போலவும் தெரிகிறது.
இவ்வாறு இரண்டில் எது எனத் தெளிவு
பெற முடியாத நிலையில் அடுத்தவரிடம் தமக்கு ஏற்பட்ட
ஐயத்தைத் தீர்த்துக் கொள்ள வினவப்படும் வினா, ஐயவினா
எனப்படும். |
|||||||||||||||||||||||||||||
5.1.4 கொளல்வினா | |||||||||||||||||||||||||||||
ஒரு பொருளைப் பிறரிடம் இருந்து பெறுவதற்காக வினவப்படும் வினா, கொளல்வினா எனப்படும். எ-டு: துவரம் பருப்பு உள்ளதா? |
|||||||||||||||||||||||||||||
5.1.5 கொடைவினா
|
|||||||||||||||||||||||||||||
பிறருக்குக் கொடுப்பதற்காக ஒருவர் மற்றவரிடம் வினவுவது கொடை வினா எனப்படும்.
எ-டு: நண்பா, சாப்பிடுகிறாயா? |
|||||||||||||||||||||||||||||
5.1.6 ஏவல்வினா
|
|||||||||||||||||||||||||||||
ஒருவர் ஒரு செயலை மற்றவரைச் செய்விக்க வேண்டும் என்பதற்காக வினவுவது ஏவல்வினா எனப்படும்.
எ-டு: எழிலா, பள்ளிக்குப் போகிறாயா? |
|||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||