1.3 தமிழகத்தில் நடைபெற்ற போர்கள் சோழ மண்டலக் கடற்கரை ஓரத்தில் உள்ள சென்னைப்பட்டினம்
ஆங்கிலேயர் கைவசத்திலும், புதுச்சேரி பிரெஞ்சுக்காரர் கைவசத்திலும்
இருந்தன. இவ்விரு நகரங்களும் ஐரோப்பியர் காலத்தில் பெரிய வாணிகத் துறைமுகப்
பட்டினங்களாக விளங்கின. இரு நாட்டினரும் அவரவர் ஊரில் வலிமை பொருந்திய கோட்டைகளை
எழுப்பிக் கொண்டனர். புதுச்சேரிக்குத் தெற்கே சற்றுத் தொலைவில் அமைந்திருந்த
செயின்ட் டேவிட் சோழ மண்டலக் கடற்கரைப் பகுதியும், அதைச் சார்ந்துள்ள நிலப் பகுதியும் இந்திய வரலாற்றில் கருநாடகம் என்னும் பெயரால் வழங்கி வருகின்றன. இது ஐரோப்பியர் கொடுத்த பெயராகும். ஐரோப்பியர் காலத்தில் கருநாடகம் அரசியல் துறையிலும், சமூகத் துறையிலும் மிகப்பெரும் கொந்தளிப்பில் ஆழ்ந்திருந்தது. மொகலாயப் பேரரசின் கீழ்த் தக்காணத்துச் சுபேதாரான நிஜாம் உல் முல்க் என்பவன் ஐதாரபாத்தில் அமர்ந்து அரசாண்டு வந்தான் (சுபேதார் – இராணுவ அதிகாரி). அவன் ஆணைக்கு உட்பட்டு ஆர்க்காட்டை நவாப் தோஸ்து அலிகான் என்பவன் ஆண்டு வந்தான்.
காலப்போக்கில் தக்காணத்துச் சுபேதார் நிஜாம் உல் முல்க் மொகலாயர் பிடியினின்று நழுவித் தன்னை ஒரு சுதந்தர மன்னனாக அறிவித்துக் கொண்டான். அவனைப் பின்பற்றி ஆர்க்காடு நவாபும் தன்னை ஒரு சுதந்தர மன்னனாக அறிவித்துக் கொண்டான். இதற்கிடையில் வடக்கே இருந்து மராட்டியர்கள் கி.பி. 1741இல் படையெடுத்து வந்து ஆர்க்காட்டு நவாபு தோஸ்து அலிகானைக் கொன்று அவனுடைய மருமகனான சந்தாசாயபுவைச் சிறை பிடித்துச் சென்றார்கள்.
தோஸ்து அலிகானின் மகனான சப்தர் அலிகான் மராட்டியருடன் சமாதானம் செய்து கொண்டு ஆர்க்காட்டை ஆட்சி செய்து வந்தான். எனினும் அவன் அவனது உறவினனான முர்தஸா அலி என்பவனால் கொல்லப்பட்டான். தொடர்ந்து ஏற்பட்ட இந்நிகழ்ச்சிகள் கருநாடகக் குடிமக்களுக்குப் பேரச்சத்தையும், பெருந்துன்பத்தையும் விளைவித்தன. இந்நிலையைப் பயன்படுத்தி நிஜாம் உல் முல்க் கி.பி. 1743இல் கருநாடகம் வந்து, தனது நம்பிக்கைக்கு உரியவனான அன்வாருதீன்கான் என்பவனை ஆர்க்காட்டு நவாபாக நியமித்தான். இக்காலக் கட்டத்தில் ஐரோப்பாவில் நடைபெற்ற ஆஸ்திரிய உரிமைப் போட்டி ஒன்றில் ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் எதிர்க்கட்சிகளுக்குத் துணை நின்று ஏழாண்டுக் காலம் (கி.பி. 1742-1748) போரில் ஈடுபட்டிருந்தனர். அக்காரணத்தால் இந்தியாவிலும் அவ்விரு நாட்டுக் கம்பெனிகளாகிய ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும், பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் இடையே போர் மூண்டது. இப்போரே முதல் கருநாடகப் போர் எனப்படுகிறது. பிரெஞ்சுக்காரராகிய புதுச்சேரிக் கவர்னர் டூப்ளே
ஆங்கிலேயருடன் ஆங்கிலேயருடன் நடத்திய முதல் கருநாடகப் போரில் டூப்ளே பல நுட்பங்களை உணர்ந்து கொண்டார். நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட தனது படையின் பலத்தையும், பயிற்சி அளிக்கப்படாத இந்தியப் படைகளின் பலவீனத்தையும் உணர்ந்து கொண்டார். எனவே எந்த நேரத்திலும் உள்நாட்டு மன்னர்கள் படை உதவி நாடித் தன்னிடம் வரக்கூடும் என்று டூப்ளே எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். மராட்டியர்களால் சிறை பிடிக்கப்பட்ட சந்தா சாயபு ஏழாண்டுகள் கழித்துக் கி.பி. 1748இல் விடுதலையானான். உடனே தன் மாமனார் தோஸ்து அலிகானிடமிருந்து பறிக்கப்பட்ட ஆர்க்காட்டு அரசை மீட்டுக் கொள்ளும் முயற்சியில் இறங்கினான். அதே சமயம் ஐதராபாத்தில் நிஜாம் உல் முக் காலமானான். அவனுக்குப் பின் அவன் மகன் நாஜர் ஜங் என்பவன் தக்காணத்தின் சுபேதார் ஆனான். ஆனால் அவனுடைய பேரன் முஜாபர் ஜங் என்பவனும் தக்காணத்தின் சுபேதார் பதவிக்கு உரிமை கொண்டாடினான். இத்தகைய நல்வாய்ப்பை எதிர்பார்த்திருந்த டூப்ளே ஆர்க்காட்டு அரியணையில் ஏற்றுவிப்பதாகச் சந்தா சாயபுவினிடமும், தக்காணத்து அரியணையில் ஏற்றுவிப்பதாக முஜாபர் ஜங்குடனும் உடன்படிக்கை செய்து கொண்டார். அதன்படி டூப்ளே, சந்தா சாயபு, முஜாபர் ஜங் மூவரும் கூட்டுச் சேர்ந்து கி.பி.1749இல் ஆம்பூரில் நடந்த போரில் அன்வாருதீனைக் கொன்றனர். அன்வாருதீனின் மகன் முகமது அலி திருச்சிராப்பள்ளிக்கு ஓடி விட்டான். அவனைத் துரத்திக் கொண்டு பிரெஞ்சுப் படை ஒன்று திருச்சிராப்பள்ளியை நோக்கி விரைந்தது. இந்நிலையில் ஆங்கிலேயர்கள் பிரெஞ்சுக்காரர்களால் தங்களுக்குப் பேராபத்து வரும் என்பதை உணர்ந்தனர். எனவே அவர்கள் படை உதவி வேண்டி நாஜர் ஜங்குக்கு விண்ணப்பித்துக் கொண்டார்கள். அத்துடன் அமையாது அவர்கள் முகமது அலியின் உதவிக்குச் சிறுபடை ஒன்றையும் திருச்சிராப்பள்ளிக்கு அனுப்பி வைத்தார்கள். ஆங்கிலேயரின் வேண்டுகோளுக்கு இணங்கிப் படையெடுத்து வந்த நாஜர் ஜங் பிரெஞ்சுக்காரர்களோடு கி.பி. 1750இல் செய்த போரில் கொல்லப்பட்டான். முஜாபர் ஜங் தக்காணத்துச் சுபேதார் ஆனான். செய்ந்நன்றி மறவாத முஜாபர் ஜங் புதுச்சேரியைச் சுற்றியுள்ள சிறு நிலப் பகுதிகளையும், ஒரிஸ்ஸாவைச் சுற்றியுள்ள சிறு நிலப் பகுதிகளையும், மசூலிப்பட்டினத்தையும் டூப்ளேயுக்கு வழங்கினான். மேலும் கிருஷ்ணா நதிக்குத் தென்புறத்தில் மொகலாயப் பேரரசுக்குச் சொந்தமான நிலப்பகுதிக்கு டூப்ளேயைக் கவர்னராக நியமித்தான். புதிய பதவி பெற்றிருந்த மகிழ்ச்சியில் பூரித்துப் போயிருந்தார் டூப்ளே. ஆர்க்காட்டையும் ஐதராபாத்தையும் நோக்கிப் பெருமிதம் அடைந்தார். தனக்கு ஆதரவான இருவர் அவ்விரு நாடுகளின் அரியணையில் ஏறி ஆட்சி புரிந்து வந்தது அவருக்கு எல்லையில்லா மகிழ்ச்சியைத் தந்தது. இதற்கிடையில் திருச்சிராப்பள்ளியை நோக்கிச்
சென்ற பிரெஞ்சுப் படை வழியில் தஞ்சாவூரில் களைத்துப் போய் அவ்விடத்திலேயே
தங்கிவிட்டது. அதே சமயம் ஆங்கிலேயரின் உதவியைப் பெற்ற முகமது அலியின் எதிர்ப்பும்
கடுமையாயிற்று. உடனே டூப்ளே, லா என்பவன் தலைமையில் மற்றொரு படையை
அனுப்பினார். இதற்குள் ஆங்கிலேயருக்கு உதவியாக மைசூர், தஞ்சை மன்னர்களும்,
மராட்டியத் தலைவன் முராரி ராவ் என்பவனும் படைகளை அனுப்பி வைத்தனர்.
மேலும் வங்கத்திலிருந்து ஆங்கிலேயரின் இந்த வெற்றி அவர்களுடைய பகைவர்களுக்கு அச்சத்தையும், அதிர்ச்சியையும் விளைவித்தது. பிரெஞ்சுப் படைத் தலைவன் லா திருவரங்கத்தில் சென்று ஒளிந்து கொண்டான். கிளைவ் திருவரங்கத்தை வளைத்துக் கொள்ளுமாறு தன் படைக்கு ஆணையிட்டார். சந்தா சாயபுவின் துணைக்காக டூப்ளே மேலும் ஒரு படையை அனுப்பினார். ஆனால் அப்படை நிலைகுலைந்து ஆங்கிலேயரிடம் சரண் அடைந்தது. லாவும் அவனுடைய படையினரும் ஆங்கிலேயரால் சிறை பிடிக்கப்பட்டனர். சந்தா சாயபு கொல்லப்பட்டான். டூப்ளே நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை. அவருடைய தாய் நாடான பிரான்சிலேயே அவருக்கு எதிர்ப்புக் கிளம்பியது. அவர் மேல் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைப் பிரெஞ்சு அரசு சுமத்தியது. எனவே அவரைப் பிரான்சுக்குத் திரும்பி வரும்படி செய்தது. கோடே ஹா என்பவரைப் புதுச்சேரிக் கவர்னராக நியமித்தது. கோடே ஹா புதுச்சேரிக் கவர்னராகப் பதவியேற்றதும் ஆங்கிலேயருடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி, இரு நாட்டினரும் மேற்கொண்டு ஒருவருக்கு எதிராக ஒருவர் போரிடுவதில்லை என்றும், அவரவர்கள் தத்தம் வசம் இருந்த நாட்டை அவர்களே வைத்துக் கொள்ளலாம் என்றும், இரு நாட்டினரும் உள்நாட்டு அரசியலில் தலையிடக் கூடாது என்றும் ஒப்புக் கொண்டனர். ஐதர் அலி என்பவன் சிறந்த வீரன். அரசியல்
சூழ்ச்சிகளில் இவ்வாறு ஆபத்தில் தன்னைக் கைவிட்ட ஆங்கிலேயர்க்கு எதிராக ஐதரலி நிஜாமுடனும் மராட்டியருடனும் கூட்டணி ஒன்றை அமைத்துக் கொண்டான். இச்சமயத்தில் அரபிக் கடற்கரையில் பிரெஞ்சுக்காரருக்குச் சொந்தமான மாகி என்னும் ஊரை ஆங்கிலேயர் கைப்பற்றிக் கொண்டனர். இதனை அறிந்த ஐதர் அலி சினந்து ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் அறிவிப்புச் செய்தான். இதே சமயத்தில் உலக அரங்கில் பிரான்ஸ், ஸ்பெயின், ஹாலந்து போன்ற நாடுகள் யாவும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிய ஓர் அணியாக நின்றன. இத்தகைய நல்ல சூழ்நிலையைப் பயன்படுத்திப் பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவில் தாம் இழந்த பகுதிகளை மீட்டுக்கொள்ளத் திட்டமிட்டனர். ஐதர் அலி கி.பி.1780ஆம் ஆண்டு 90,000 காலாட் படையினருடனும், 100 பீரங்கிகளுடனும் மைசூரினின்று படையெடுத்துச் செங்கண்மாக் கணவாயின் வழியாக வந்து, கருநாடகச் சமவெளியில் புகுந்தான். அவன் படையினர், வந்த வழியில் உள்ள ஊர்களையெல்லாம் தீ மூட்டிக் கொண்டும், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட மக்கள் அனைவரையும் படுகொலை செய்து கொண்டும் வந்தனர். இதனால் அவனது படையினர் வந்த வழியில் உள்ள ஊர் மக்கள் பீதியினால் மலைகளிலும், காடுகளிலும் சென்று ஓடி மறைந்து கொண்டார்கள். கர்னல் பெய்லி என்ற ஆங்கிலேயப் படைத்தலைவன் ஒரு படையுடன் ஐதர் அலியை எதிர்த்தான். அப்போது நடந்த போரில் கர்னல் பெய்லியும் அவனுடைய படையினரும் வெட்டுண்டு மாய்ந்தனர். இத்தோல்வியால் ஆங்கிலேயரின் பெருமை குறைந்துவிட்டது. ஆர்க்காடு ஐதர் அலியின் வசமாயிற்று. எனினும் ஆங்கிலேயர் சோர்ந்து விடவில்லை. அரசியல் சூழ்ச்சிகளில் கைதேர்ந்தவர்களான அவர்கள் மராட்டியரையும், நிஜாமையும் ஐதர் அலியை விட்டு விலகும்படி செய்தனர். கல்கத்தாவில் ஆங்கிலேயரின் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் என்பவர் சென்னைக் கவர்னரைப் பதவியிலிருந்து விலக்கினார். ஒரு பெரும்படையைத் திரட்டி, சர் அயர் கூட் என்னும் படைத்தலைவன் ஒருவன் தலைமையில் ஐதர் அலியின் மீது ஏவினார். சிதம்பரத்தை அடுத்த பறங்கிப் பேட்டையில் கி.பி.1781இல் பெரும்போர் நடைபெற்றது. இப்போரில் ஐதர் அலி படுதோல்வியுற்றான். கி.பி. 1783இல் ஐதர் அலி புற்றுநோயின் காரணமாக இறந்தான். அவனுக்குப் பின் அவன் மகன் திப்பு சுல்தான் மைசூர் சுல்தானாக மூடிசூட்டிக் கொண்டான். இவன் ஆங்கிலேயரிடம் அளவற்ற வெறுப்புக் கொண்டிருந்தான். எனினும் பிரெஞ்சுக்காரரிடம் மாறாத நட்புக் கொண்டிருந்தான். திப்பு சுல்தான் காலத்திலும் பல போர்கள்
நடந்தன. இவ்வுடன்படிக்கை தனக்கு மானக்கேடானது என்று நினைத்தான் திப்பு சுல்தான். ஆங்கிலேயர் மீது அவனது வெறுப்பு வஞ்சகமாக வளர்ந்தது. எனவே திப்பு சுல்தான் ஆங்கிலேயரை வென்று அடக்க, பிரெஞ்சுக்காரர்களின் உதவியை நாடினான். அவனுக்கு உதவியாகப் பிரெஞ்சுப் படைகள் மங்களூர் வந்து இறங்கின. அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த வெல்லெஸ்ஸி பிரபு, ஆங்கிலேயரைச் சூழ்ந்து வரும் பேராபத்தை நன்கு உணர்ந்தார். உடனே அவர் திப்பு சுல்தானுக்கு எதிராக நிஜாமுடனும் மராட்டியருடனும் உடன்படிக்கை செய்து கொண்டார். ஜெனரல் ஹாரிஸ் என்பவன் தலைமையில் கி.பி.1799இல் பெரும்படை ஒன்றை வெல்லெஸ்ஸி பிரபு திப்பு சுல்தான் மீது ஏவினார். ஆங்கிலேயரின் பீரங்கிக் குண்டுகளுக்குத் திப்பு சுல்தானின் கோட்டைகள் இரையாயின. திப்பு சுல்தானின் சேனைகள் போரிடும் வலிமை இழந்து ஆங்கிலேயரிடம் சரண் அடைந்தன. திப்பு சுல்தான் தன் இறுதி மூச்சு வரையில் போராடிக் கையில் ஏந்திய வாளுடன் வீர மரணத்தைத் தழுவினான். இதனால் ஆங்கிலேயருக்குத் தென்னிந்தியாவில் தடையாக இருந்த இறுதிப் பகையும் ஒழிந்தது. இவ்வாறாக மைசூர்ப் பகுதியில் ஐதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோருக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே பல பெரும்போர்கள் நடைபெற்றன. இவற்றையே மைசூர்ப் போர்கள் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். |