2.0 பாட முன்னுரை

ஆங்கிலேயர் தமிழகத்தில் ஆட்சியை எவ்வாறு ஏற்படுத்தினர் என்று இங்குக் காணலாம். பல சிற்றரசுகளுக்கு இடையே புழக்கத்திலிருந்த வெவ்வேறு வரிகளை எவ்வாறு ஆங்கிலேயர் சரி செய்தனர் என்றும், பாளையக்காரர்களை எவ்வாறு நடத்தினர் என்றும் காணலாம்.

வரிச் சீரமைப்பு, நாணயங்கள் வெளியிடுதல், நீதித்துறை போன்றவை பற்றிய செய்திகளை விளக்கமாகக் காணலாம்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட வேலூர்க் கலகம், வெள்ளையர் கலகம் போன்ற கலகங்கள் பற்றி விரிவாகக் காணலாம்.