4.0 பாட முன்னுரை இப்பாடத்தின் மூலம் ஆங்கிலேயர் 19ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஆட்சி நடத்தியபோது சமூகத்தில் என்னென்ன மாறுதல்கள் ஏற்பட்டன என்பதைக் காண இருக்கிறோம். மக்களிடையே காணப்பட்ட பலவகையான மூடப் பழக்கவழக்கங்கள் சில சீர்திருத்தவாதிகளால் மாறியது பற்றிப் படிக்க இருக்கிறோம். சமுதாயத்தில் இருந்த பல்வகைக் குலப் பிரிவுகள் பற்றியும், வலங்கை-இடங்கைப் பிரிவினர்க்கு இடையே ஏற்பட்ட பூசல்கள் பற்றியும் அறிய இருக்கிறோம். இதற்கு முன்பு இல்லாத அளவிற்குக் கல்வியின் வளர்ச்சி இருந்தது என்பதையும், இதன் காரணமாகத் தமிழ் நூல்கள் பல எழுதப்பட்டன என்பதையும், பல்கலைக்கழகங்கள் சென்னையிலும், கல்கத்தாவிலும், பம்பாயிலும் தொடங்கப்பட்டன என்பதையும் பற்றிக் காண இருக்கிறோம். சமய வளர்ச்சியில் யார் யார் ஈடுபட்டனர் என்பது பற்றியும் படிக்க இருக்கிறோம். |