4.7 தொகுப்புரை

இப்பாடத்தில் ஆங்கிலேயர் கி.பி. 19ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஆட்சி நடத்தியபோது என்னென்ன மாறுதல்கள் நிகழ்ந்தன என்பதையெல்லாம் படித்துணர்ந்திருப்பீர்கள்.

மக்களிடையே காணப்பட்ட பலவகையான மூடப் பழக்கவழக்கங்கள் பற்றியும், அவை மறைந்து போனமை பற்றியும் அறிந்து கொண்டிருப்பீர்கள்.

கல்வியின் வளர்ச்சியும், இலக்கிய வளர்ச்சியும் நன்றாக இருந்தன என்பது பற்றி விளக்கமாகப் படித்துப் புரிந்துகொண்டிருப்பீர்கள்.

சமய வளர்ச்சியும் சிறப்பாக இருந்து வந்தது என்பதையும் உணர்ந்து கொண்டிருப்பீர்கள்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.
ஆங்கிலேயரின் ஆட்சியால் இந்தியாவிற்கு ஏற்பட்ட இரு நன்மைகள் யாவை?
2.
திண்ணைப் பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு யாருக்குக் கிடைத்தது?
3.
மாணவர்கள் எவற்றை மனப்பாடம் செய்தனர்?
4.
மாணவர்கள் எத்துறைகளில் பயிற்சி பெறவில்லை?
5.
கி.பி. 1854இல் வகுக்கப்பட்ட திட்டத்திற்குப் பெயர் என்ன?
6.
கல்வித்துறை இயக்குநராக முதலில் பொறுப்பேற்றவர் யார்?
7.
எப்போது சென்னையில் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது?
8.
பிரதாப முதலியார் சரித்திரம் என்ற நாவலை எழுதியவர் யார்?
9.
கால்டுவெல் எழுதிய நூலின் பெயர் யாது?
10.
திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
11.
திருவருட்பாவை இயற்றியவர் யார்?