5.5 தொகுப்புரை

இப்பாடத்தின் மூலம் இந்திய அரசியலில் வங்காளம் எதற்காகப் பிரிக்கப்பட்டது என்பதைப் பற்றியும், இந்தியாவுக்குச் சில அரசியல் உரிமைகள் வழங்க வேண்டி ஆங்கிலேய அரசினால் என்னென்ன சட்டங்களும், சீர்திருத்தங்களும் ஏற்படுத்தப்பட்டன என்பதைப் பற்றியும் நன்கு படித்துணர்ந்திருப்பீர்கள்.

காங்கிரஸ் கட்சி, நீதிக் கட்சி, சுயராஜ்ஜியக் கட்சி போன்ற கட்சிகள் தோற்றுவிக்கப்பட்டன என்பது பற்றி படித்துப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற ஒன்று தமிழகத்தில் ஏற்பட்டது பற்றியும், அது எதற்காக நிறுவப்பட்டது என்பது பற்றியும் படித்திருப்பீர்கள்.

இந்திய விடுதலைக்காகப் போராடிய தமிழகத் தலைவர்களைப் பற்றி விரிவாகப் படித்துணர்ந்திருப்பீர்கள்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.
கப்பலோட்டிய தமிழன் யார்?
2.
பாரதியாரின் இயற்பெயர் யாது?
3.
தமிழக விடுதலைப் போராட்டத்தில் மும்மூர்த்திகள் என அழைக்கப்பட்டவர்கள் யாவர்?
4.
சுப்பிரமணிய சிவா சென்னையில் உள்ள திருவல்லிக்கேணிக் கடற்கரைக்குச் சூட்டிய பெயர் யாது?
5.
வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்ட திருநெல்வேலிக் கலெக்டர் யார்?
6.
வ.உ.சி. ஓட்டிய சுதேசிக் கப்பலைக் கதர்க் கப்பல் வருகுதே என்று பாடியவர் யார்?
7.
திருப்பூர் குமரன் எவ்வாறு போற்றி அழைக்கப்படுகிறார்?
8.
காந்தியடிகளுக்குப் பாரதியை அறிமுகம் செய்து வைத்தவர் யார்?
9.
காமராசரின் அரசியல் குருவாக விளங்கியவர் யார்?
10.
வைக்கம் வீரர் என அழைக்கப்படுபவர் யார்?