6.6 தொகுப்புரை

இப்பாடத்தைப் படித்து முடித்த நீங்கள் ஒன்றாக இருந்த சென்னை மாநிலம் தமிழ்நாடு என்று எவ்வாறு மாறியது என்பதை நன்கு புரிந்து கொண்டிருப்பீர்கள்.

விடுதலைக்குப் பின் தமிழகத்தை ஆண்ட முதல் அமைச்சர்களைப் பற்றியும் அவர்கள் செய்த சீரிய பணிகளைப் பற்றியும் அறிந்து கொண்டிருப்பீர்கள்.

விடுதலைக்குப் பின் தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, இலக்கிய வளர்ச்சி எவ்வாறு மேலோங்கியுள்ளன என்பதை நன்கு தெரிந்து கொண்டிருப்பீர்கள்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.
இந்தியாவில் இதுவரை எத்தனை ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன?
2.
தமிழகத்தில் வேளாண்மையில் சிறந்து விளங்கிய இடங்கள் எவை?
3.
இந்திய விடுதலைக்குப் பின் 1959இல் கட்டப்பட்ட அணைக்கட்டு எது?
4.
தமிழகத்தில் சுதந்திரத்திற்குப் பின் ஏற்படுத்தப்பட்ட தொழில்பேட்டைகள் எங்கெங்கு அமைந்துள்ளன?
5.
மதுரையில் எப்போது பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது?
6.
தனித்தமிழ் இயக்கத்தை நிறுவியவர் யார்?
7.
தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், சமூக சீர்திருத்த நோக்கத்திற்கும் நூல்களை எழுதியவர் யார்?