இருண்ட காலத்தில் வாழ்ந்த சைவ சமய முன்னோடிகள்
காரைக்கால் அம்மையாரும், திருமூலரும்
ஆவர்.
திருமூலர் கயிலையில் வாழ்ந்த சிவயோகியார். திருமூலர்
இயற்றிய திருமந்திரம்
தோத்திரமாகவும் சாத்திரமாகவும்
அமையும். திருமந்திரம் 3000 செய்யுட்களால் இயற்றப்பட்டது.
இதில் ஒன்பது தந்திரங்கள் உள்ளன. திருமந்திரம் சைவ
சித்தாந்தத்தை
விளக்கிக் கூறுகின்றது.
முத்தொள்ளாயிரம் மூன்று வேந்தர்களையும் பற்றிய 900
வெண்பாக்களை உடையது. கைக்கிளைப்
பாடல்கள் இதில் மிகுதி.
பண்டைத் தமிழர் பண்பாடு பற்றிய பல செய்திகள் இந்நூலில்
உள்ளன.
|