|  
 
  பல்லவ மன்னர்களின் தீவிரச் 
 சமயப் பற்றும், கோயில் பணியும்,
 கொடைகளும், மக்கள் அடியவரை ஆதரிக்கத் தூண்டின. சைவ,
 வைணவ இலக்கியங்கள் உருப்பெற்றன. அவை 
 மக்களால்
 படிக்கப்பட்டன; கோயில், கூட்டுவழிபாடுகளில் பாடப்பட்டன. சமண
 சமயத்தில் பெருங்கதை  எனும் மொழிபெயர்ப்பு நூலும், மேரு மந்தர
 புராணம் எனும் புராண நூலும் மட்டுமே இக்காலத்து எழுந்தன.
 முத்தரையரைப் புகழும் தனிப்பாடல்கள் கிடைத்துள்ளன. உரைநூல்,
 அகப்பொருள் நூல் போன்ற பிற நூல்களும் தோன்றின. 
 
  | 
 |||||||||||||||