|
பதினோராம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆட்சி செய்த மன்னர்கள் சமயத்திற்குச்
சிறப்பிடம் கொடுத்தனர். மேலும் இந்நூற்றாண்டில் கல்லாடம் போன்ற
சிறந்த இலக்கிய நூல்கள் தோன்றின. யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை,
வீரசோழியம் போன்ற இலக்கண நூல்கள் எழுதப்பட்டன. சிலப்பதிகாரம்,
திருக்குறள் போன்றவற்றிற்கு உரைநூல்கள் தோன்றின. நம்பியாண்டார்
நம்பி திருமுறைகளைத் தொகுத்தார். இவை பற்றிய செய்திகளை இந்தப்
பாடம் சொல்கிறது.
|