பாடம் - 2

A04132 பன்னிரண்டாம் நூற்றாண்டு - முதற்பகுதி

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


 

இந்தப் பாடம் பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய கலிங்கத்துப்பரணி, பெரியபுராணம், திருவுந்தியார், தண்டியலங்காரம் ஆகிய நூல்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இக்காலத்தில், இலக்கண உரைகள், இலக்கிய உரைகள் எழுந்தன. மேலும், வைணவ நூல்களும், சமண நூல்களும், பிரபந்தங்களும் தோன்றின. அவற்றைப் பற்றியும் இந்தப் பாடம் கூறுகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?



  • பரணி மூலம் போர் தொடர்பான செய்திகளும், வருணனைகளும் வெளிப்பட, இலக்கியம் ஒரு கருவியாக அமைந்ததை உணரலாம்.

  • சமய நூல்களும், அவற்றிற்கு இணையாகப் போர் பற்றிய நூல்களும், அவற்றுக்குச் சமமாகத் தத்துவக் கருத்துகளைக் கொண்ட நூல்களும் வெளிவர இக்காலப் பகுதி துணையாக இருந்ததை அறியலாம்.

  • இந்நூற்றாண்டின் முற்பகுதியிலும் இலக்கணம் மற்றும் உரை நூல்களின் பங்களிப்பு மிகுதியாக இருந்ததைப் புரிந்து கொள்ளலாம்.

  • வைணவ இலக்கியத்தின் சீரான வளர்ச்சி இக்காலத்தில் தொடர்ந்து இருந்ததை உணரலாம்.

பாட அமைப்பு