|
இந்தப் பாடம் பன்னிரண்டாம்
நூற்றாண்டின் இறுதியில்,
தோன்றிய இலக்கியங்கள், இலக்கண நூல்கள்,
சாத்திரங்கள்
ஆகியவை பற்றிக் குறிப்பிடுகின்றது. குறிப்பாக, ஒட்டக்கூத்தர்,
ஒளவையார் போன்றோரது படைப்புகளைப் பற்றிய செய்திகளைக்
கூறுகின்றது.
சிலப்பதிகாரத்திற்கு
உரை எழுதிய அடியார்க்கு
நல்லாரைப் பற்றிக் கூறுகிறது. வைணவர்களால் இயற்றப்
பெற்ற
உரைகளையும், தனியன்களையும் பற்றி எடுத்துரைக்கின்றது.
மேலும்,
இக்காலக் கட்டத்தில் எழுதப்பட்ட பிரபந்தங்கள்
குறித்தும் குறிப்பிடுகின்றது.
|