பாடம் - 5

A04135  பதினான்காம் நூற்றாண்டு

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


இந்தப் பாடம் பதினான்காம் நூற்றாண்டில் தோன்றிய சைவ இலக்கியங்கள், இலக்கண நூல்கள், உரைநடை நூல்கள் ஆகியவற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறது. வைணவர்களால் இயற்றப்பட்ட நூல்களையும், சமணர்களால் இயற்றப்பட்ட நூல்களையும் அறிமுகப்படுத்துகிறது. மேலும், அக்காலக் கட்டத்தில் எழுதப்பட்ட, பிரபந்தங்கள், சித்தர் பாடல்கள் முதலியவற்றைப் பற்றியும் கூறுகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?



  • இக்காலப் பகுதியில் சமயத்துறையில் நூல்கள் பெருகியதை அறியலாம்.

  • சைவம் சார்ந்த இலக்கியங்கள் அதிகம் பெருகிய காலம் இது என அறியலாம்.

  • சித்தர்களின் இலக்கியப் பங்களிப்பு இக்காலப் பகுதியில் கணிசமாக இருந்ததைக் காணலாம்.

  • ஒன்றுக்கு மேற்பட்ட பட்டினத்தார் வாழ்ந்ததைத் தெரிந்து கொள்ளலாம்.

பாட அமைப்பு