|
இக்காலக்
கட்டத்தில் உதயண குமார காவியம் போன்ற காப்பியங்களும்,
அரிச்சந்திர புராணம் போன்ற புராணங்களும் தோன்றின. மேலும்
திருப்புகழ், திருக்கலம்பகம் போன்ற சமயம் சார்ந்த இலக்கியங்களும்,
சித்திரமடல், கபிலரகவல் போன்ற சமயம் சாராத இலக்கியங்களும்
எழுதப்பட்டன. இலக்கண நூல்களும், நிகண்டுகளும் கூட இக்காலக்
கட்டத்தில் வெளிவந்தன. மேலும் திருக்குறள், தொல்காப்பியம்
போன்றவற்றிற்குச் சிறந்த உரை நூல்களும் எழுந்தன. இவை பற்றிய
செய்திகள் இப்பாடத்தில் இடம் பெற்றுள்ளன.
|