5.8 தொகுப்புரை
இருபதாம் நூற்றாண்டின்
முற்பகுதியில் தமிழ் உரைநடையில் சாதனை படைத்தவர்கள் மறைமலையடிகள், திரு.வி.க.,
உ.வே.சா என்ற மூவராவர். தமிழில் முதன் முதலில் அறிவியல் நூல்களை எழுதியவர்
மறைமலை அடிகளாகத்தானிருக்க வேண்டும். மணிக்கொடி என்ற பத்திரிகையால்
சிறுகதை இலக்கியம் வளம் பெற்றுக் கொண்டிருக்கும் போது, நாவல் இலக்கியம்
படைத்தோர் புதிய சமுதாயத்தைப் படைப்பதில் ஈடுபட்டனர். தமிழ்த் திறனாய்வு
நெறியிலே புதுமை படைத்தார் வையாபுரிப்பிள்ளை. உரையாசிரியர்களால், பண்டிதர்கள்
மட்டுமே படித்துச் சுவைத்த தமிழ் இலக்கியம் எளிமை பெற்றது. வெண்பாவும்
விருத்தமும் மங்கிப் போகாத காலத்திலேயே புதுக்கவிதை தோற்றம் பெற்றது.
புதுப்புது இலக்கியத் துறைகள் காலத்தின் தேவையொட்டி எழுந்தன. தமிழிசைக்
சங்கத்தால் தமிழிசை ஏற்றம் பெற்றது. இலக்கணத் துறையில் உரிச்சொல்
விளக்கம் என்ற நூல் முத்திரை பதித்தது. பார்சி மற்றும் மராட்டி நாடகக்
குழுக்களின் தாக்கத்தால் படித்தவர்கள் சமுதாயத்தில் அந்தஸ்து உள்ள பெரியோரும்
நாடக நடிகர்களாக நடிக்கும் அளவு நாடகத் துறை மலர்ச்சி பெற்றது. சிற்றிலக்கியத்தின்
தோற்றம் இலக்கண நூலில் கூறப்பட்டது போலவே கடித, பயண, வாழ்க்கை வரலாற்று
இலக்கியங்கள் தனிப் பிரிவாகக் கிளைத்தன. மொத்தத்தில் இருபதாம் நூற்றாண்டில்
தமிழ் இலக்கியம் ஏற்றம் பெற்றது.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II |
1 |
‘உரிச்சொல் விளக்கம்’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
|
விடை |
2 |
‘அமைதி’ என்ற மௌன நாடகத்தின் ஆசிரியர் யார்?
|
விடை |
3 |
‘ஆத்ம
சோதனை’ என்ற நூலை எழுதியவர் யார்? |
விடை |
4 |
தமிழ் நாடக வளர்ச்சி பற்றிக் குறிப்பிடுக.
|
விடை
|
|
|