பாடம் 2

A04142 : பதினேழாம் நூற்றாண்டு

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    பதினேழாம் நூற்றாண்டைப் பொருத்தவரை சமய
இலக்கியங்கள் செழித்தன. ஏற்கனவே தோன்றியிருந்த
சிற்றிலக்கியங்கள் நன்கு வளர்ந்தன. இந்நூற்றாண்டின் மைல்
கற்களாகச் சிவப்பிரகாசரும் குமரகுருபரரும் திகழ்கின்றனர்.
மடங்களின்     ஆதரவில்,     சிற்றரசர்களின்     நிழலில்,
வள்ளல்களின் வள்ளன்மையில் தமிழ் செழித்தது; நீதி
நூல்கள், இலக்கண நூல்கள், மொழியாக்கப் புராணங்கள்,
கிறித்தவர்களின் தமிழ்த் தொண்டு எனப் பரந்து விரிந்தது.
இவற்றை விளக்குவதே இந்தப் பாடத்தின் நோக்கம்.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

பதினேழாம் நூற்றாண்டில் சைவ இலக்கியம் வளர்ச்சி
பெற்றதைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
வைணவ இலக்கியம் அடைந்த வளர்ச்சியை அறியலாம்.
இந்நூற்றாண்டில் தோன்றிய இலக்கண நூல்கள் பற்றிய
அறிமுகம் பெறலாம்.
கிறித்தவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு பற்றித்
தெரிந்து கொள்ளலாம்.