|
உலகில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன
என்று பேராசிரியர் அகத்தியலிங்கம் கூறுவார் (உலக மொழிகள்
5-ஆம் பகுதி,
முகவுரை). உலக மக்களில் 20 விழுக்காட்டினர்
சீனமொழி பேசுகின்றனர். நியுகினியா என்ற ஒரே தீவில்
மட்டும்
700 மொழிகள் பேசப்படுகின்றன. இயாக் மொழியை
ஒரு
மூதாட்டி மட்டுமே
பேசுகிறார். அவர் இறந்தால் அவரோடு
அந்த
மொழி அழிந்துவிடும் (முனைவர் மலையமான், செவ்வியல்
மொழி தமிழ், 2001, ப. 27). மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த
மொழி, தனித்து
நிற்கும் மொழி, கலப்பு மொழி, செயற்கை மொழி
என்று மொழிகளைப் பிரிக்கலாம்.
சான்று :
| ஆங்கிலம், ஜெர்மனிய
மொழி |
இந்தோ ஐரோப்பிய
மொழிக்
குடும்பத்தைச் சேர்ந்தவை. |
| ஐனு (Ainu), பர்சாஸ்கி
(Burshaski) |
தனித்திருக்கும் மொழிகள் |
| பிட்கின் (Pidgin),
கிரியோல் (Creole) |
கலப்பு மொழிகள் |
| எஸ்பெரான்டா,
இன்டர்லிங்குவா |
திட்டமிட்டு உண்டாக்கப்பட்ட
செயற்கை மொழிகள் |
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற
பெருமொழிகளையும், கோண்டி, கூய், துளு, குரூக் போன்ற
குறுமொழிகளையும், தென்னிந்தியா, பலுசிஸ்தானம் என்று
இந்தியப் பகுதிகளிலும், அயலகத்திலும் வழங்கப்படும்
நிலையிலும், மொழி அமைப்பில் பொதுத்தன்மை, அடிப்படை
ஒற்றுமை ஆகியவற்றின் அடிப்படையில் திராவிட மொழிகள்
என்று ஒரு குடும்பத்தினவாக, ‘திராவிட மொழிக் குடும்பமாக’
அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. திராவிட மொழிகள் குறித்து
அறிகையில் அவற்றின் பரந்த புழக்கம் வியப்பளிக்கிறது.
தமிழ்மொழி முதன்மை பெறுகிறது.
பட்டியல்
இந்திய அரசியல் சாசனம் அங்கீகரித்த பதினெட்டுத் தேசிய
மொழிகளது பட்டியல்
வருமாறு:
| 1) |
அசாமி |
| 2) |
வங்காளி |
| 3) |
குஜராத்தி |
| 4) |
இந்தி |
| 5) |
கன்னடம் |
| 6) |
காஷ்மீரி |
| 7) |
மலையாளம் |
| 8) |
மராத்தி |
| 9) |
ஒரியா |
| 10) |
பஞ்சாபி |
| 11) |
சம்ஸ்கிருதம் |
| 12) |
சிந்தி |
| 13) |
தமிழ் |
| 14) |
தெலுங்கு |
| 15) |
உருது |
| 16) |
கொங்கணி |
| 17) |
நேபாளி |
| 18) |
மணிப்பூரி |
|