|  
   இந்தப் 
 பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?  
  | 
  
  
  | 
  
  
  
 
  
 |  
  
  
  | 
                       
                          -  
                            
தொல்காப்பியர் 
                              காலத் தமிழ்த் தொடர்களில் திணை, பால், எண், இடம் ஆகிய 
                              இயைபுகள் பிழைபடாது அமைந்துள்ளன என்பதனை உணரலாம். 
                               
                            
                          -  
                            
ஆயிரக் கணக்கான 
                              ஆண்டுகளாகத் தமிழ்த் தொடர்களின் இயைபு கெடாமல் நீடித்து 
                              வருவதற்குத் தொல்காப்பிய இலக்கணமே காரணம் என்பதைப் 
                              புரிந்து கொள்ளலாம்.  
                            
                          -  
                            
நெகிழ்ச்சியான 
                              தொடர் அமைப்புக் காரணமாக, சொல் வரிசையில் மாற்றம் 
                              செய்தாலும் பொருள் மாறாதிருக்கும் தமிழ்மொழியின் இயல்பைப் 
                              புரிந்து கொள்ளலாம்.  
                            
                          -  
                            
அடைமொழிகள், 
                              இயற்பெயர், சிறப்புப்பெயர் போன்றவை தொடர்களில் அமையும் 
                              முறைகள் தொல்காப்பியர் காலத்திலேயே தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்ததை 
                              உணரலாம்.  
                            
                          -  
                            
தொடரில் பொருள் 
                              மயக்கம் நேரும் சூழ்நிலைகளில் அம்மயக்கத்தைத் தவிர்க்கும் 
                              முறைகள் பற்றித் தொல்காப்பியர் கூறியுள்ளவற்றை அறிந்து 
                              கொள்ளலாம்.  
                           
                          | 
  
  
  | 
  
  
  |