5.3 வீரமாமுனிவரின் எழுத்துச் சீர்திருத்தம்
நாயக்கர் காலமான பதினைந்து, பதினாறாம்
நூற்றாண்டுகளில்தான் ஐரோப்பியர், கிறித்தவ சமயத் தொண்டு
செய்வதற்குத் தமிழகம் வந்தனர். இவர்களுள் தத்துவ
போதகர், வீரமாமுனிவர், சீகன்பால்கு ஐயர், போப் ஐயர்
போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவர்களுள் வீரமாமுனிவர் தமிழ் அகராதி அமைப்புக்கு
வித்திட்டவர்; பேச்சு வழக்குச் சொற்களுக்கு இலக்கணம்
வகுத்தவர்; அவற்றோடு தமிழில் சிறந்த எழுத்துச் சீர்திருத்தம்
செய்த பெருமை அவரையே சாரும்.
மெய்யெழுத்துப் போலவே எ, ஒ என்னும் குறில்
எழுத்துகள் இரண்டும் புள்ளி பெறும் என எழுத்து
வரிவடிங்களைப் பற்றி இலக்கண நூல்களான
தொல்காப்பியமும் நன்னூலும் குறிப்பிடுகின்றன.
வீரமாமுனிவர் தொன்னூல் விளக்கம் என்னும் தம் நூலில்
இவ்வரி வடிவங்களின் சில மாற்றங்களைக் குறிப்பிடுகின்றார்.
5.3.1 உயிர் - எகர ஒகர மாற்றம்
எ, ஒ என்னும் குற்றெழுத்துகளில் மேலே உள்ள
புள்ளியை நீக்க வேண்டும்; ஏகாரத்துக்குக் கீழே காலிட
வேண்டும்; ஓகாரத்துக்குச் சுழி தந்து எழுத வேண்டும்
என்பவை
அவர் செய்த மாற்றங்கள்.
|
பழைய
விதி |
புதிய
மாற்றம் |
குறில் |
எ்,ஒ் |
எ,ஒ |
நெடில் |
எ,ஒ |
ஏ,ஓ |
5.3.2 உயிர்மெய் - எகர ஒகர மாற்றம்
உயிர்மெய்க் குறில் எகர ஒகரங்களுக்குப் புள்ளி உண்டு
என்பது பழைய இலக்கணவிதி. ஆனால், இவ்விதியை மாற்றி
உயிர்மெய்க்குறில் எகர ஒகரங்களுக்கு ஒற்றைக் கொம்பையும்
உயிர்மெய்நெடில் ஏகார ஓகாரங்களுக்கு இரட்டைக்
கொம்பையும் அமைத்தார்.
|
பழைய
விதி
குறில் நெடில்
|
புதிய
மாற்றம்
குறில் நெடில்
|
எகர, ஏகாரம் |
கெ |
கெ கே |
ஒகர, ஓகாரம் |
கெ்ா கொ |
கொ கோ |
5.3.3 ரகர வரிவடிவ மாற்றம்
ரகரத்திற்குக் கால் இட்டு மற்ற நெடில்
குறியாகிய ‘ா’
காலிலிருந்து வேறுபடுத்தினார்.
|
பழைய
வடிவம்
|
புதிய
வடிவம் |
ரகரம் |
ா |
ர |
வீரமாமுனிவர் தமிழ் வரிவடிவில் செய்த இத்தகைய
மாற்றம் இன்றும் நமக்குப் பயனுள்ளதாக விளங்கி வருகிறது.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I |
1. |
வீரமாமுனிவர்
எழுதிய சதுரகராதியில் இடம்பெறும் நான்கு அதிகாரங்கள்
யாவை? |
விடை |
2. |
வடமொழிச்
சொற்கள் தமிழாக்கம் செய்யப்பட்டமைக்கு இரு சான்றுகள்
தருக. |
விடை |
3. |
ஓரினமாக்கம்
என்றால் என்ன? |
விடை |
4. |
தமிழில்
ஒலிப்பிலா வெடிப்பொலிகள் இடம்பெறும் இடங்களைக் குறிப்பிடுக.
|
விடை
|
|
|