6.3 இலக்கணக் கூறுகளில் ஏற்பட்ட மாற்றங்கள்
மராட்டியர் காலத் தமிழில் இலக்கணக் கூறுகளில் உள்ள
மாற்றங்கள் அக்கால இலக்கியங்களை ஆதாரமாகக் கொண்டு
ஆராயப்பட்டுள்ளன. பெயரியலைப் பொறுத்தவரை பதிலிடு
பெயர்கள், வேற்றுமை ஆகியவற்றில் உள்ள மாற்றங்கள்
குறிப்பிடப்படுகின்றன. வினையியலைக் குறித்து ஆராயும் போது
வினைவிகுதிகள், எச்சங்கள், கால இடைநிலைகள் எனப் பல
கூறுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன.
மராட்டியர் கால இலக்கணக் கூறுகள், அக்காலக் கட்டத்தில்
தோன்றிய கோடீச்சுவரக் கோவை என்ற நூலை ஆதாரமாகக்
கொண்டு ஆராயப்பட்டுள்ளன.
6.3.1 பதிலிடு பெயர்கள்
பெயருக்குப் பதிலாகக் கூறப்படும் தன்மை, முன்னிலை,
படர்க்கை ஆகிய மூவிடப் பெயர்களும் ஒருமை பன்மை என
இரண்டு நிலையிலும் காணப்படுகின்றன.
சான்று:
நான், யான் |
- |
தன்மை ஒருமை
(கோ.கோ. 55.3, 12.3) |
நாம், நாங்கள் |
- |
தன்மைப் பன்மை
(கோ.கோ. 55.4, 161.4) |
இவன், இவள் |
- |
படர்க்கை ஒருமை
(பெண்பால்) (கோ.கோ. 88.2) |
அவர் |
- |
படர்க்கைப் பன்மை
(பலர்பால்) (கோ.கோ. 160.4) |
அது |
- |
படர்க்கை ஒருமை
(ஒன்றன் பால்) (கோ.கோ. 46.4) |
6.3.2 வேற்றுமை உருபுகள்
மராட்டியர் காலத் தமிழ் மொழியில் வேற்றுமை
உருபுகளாக ஐ, கு, ஒடு, ஆல், இல், இன் முதலியன
சிற்றிலக்கியங்களில் காணப்படுகின்றன.
சான்று:
ஐ |
- |
உங்களை |
(கோ.கோ. 9 : 2) |
கு |
- |
பெற்றார்க்கு |
(கோ.கோ. 10 : 4) |
ஒடு |
- |
சிலைதன்னொடு |
(கோ.கோ. 61 : 2) |
ஆல் |
- |
அங்குசத்தால் |
(கோ.கோ. 46 : 4) |
இல் |
- |
காலடியில் |
(கோ.கோ. 69 : 1) |
இன் |
- |
தேமொழியின் |
(கோ.கோ. 69 : 2) |
6.3.3 கால இடைநிலைகள்
இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலமும்
இடை நிலைகளைப் பெற்றிருப்பதை மராட்டியர் காலத் தமிழ்
இலக்கியங்களில் காண முடிகிறது.
• இறந்தகால இடைநிலைகள்
ந்த், த்த், இன் போன்ற இறந்தகால இடைநிலைகளை
அக்காலக் கட்டத்தில் காணமுடிகிறது.
சான்று:
ந்த் |
- |
சார்ந்தனன் |
(கோ.கோ. 12 : 3) |
த்த் |
- |
முடித்தேன் |
(கோ.கோ. 25 : 4) |
இன் |
- |
எழுதினேன் |
(கோ.கோ. 25 : 3) |
• நிகழ்கால இடைநிலைகள்
கின்று என்ற நிகழ்கால இடைநிலை இக்காலத் தமிழில்
காணப்படுகின்றது.
சான்று:
|
நிற்கின்றது
நிற்கின்றனன் |
(கோ.கோ. 40 : 4)
(கோ.கோ. 63 : 4) |
• எதிர்கால இடைநிலைகள்
பழங்காலத்திலிருந்து இருந்துவந்தது போலவே மராட்டியர்
காலத்திலும் வ, ப்ப் ஆகியன எதிர்கால இடைநிலைகளாக
வழக்கத்தில் உள்ளன.
சான்று:
வ |
- |
நீங்குவர் |
(கோ.கோ. 28 : 2) |
ப்ப் |
- |
இருப்போம் |
(கோ.கோ. 34 : 4) |
6.3.4 ஏவல்வினை விகுதிகள்
ஏவல் பொருளில் வரும் சொற்கள் ஒருமை, பன்மைக்குத்
தனித்தனி விகுதிகளைப் பெற்றும் சிலவிடங்களில் விகுதி
பெறாமலும் மராட்டியர் காலத் தமிழில் காணப்படுகின்றன.
• ஏவல் ஒருமை (விகுதி பெறாமை)
சான்று:
|
போ
பார்
|
(கோ.கோ. 29 : 2)
(கோ.கோ. 32 : 4) |
• ஏவல் பன்மை (உம், மின் விகுதிகள்)
சான்று:
உம்
|
- |
சூழும் |
(கோ.கோ. 8 : 3) |
மின் |
- |
இருமின் |
(கோ.கோ. 161 : 2) |
6.3.5 எதிர்மறை வினை
எதிர்மறையை உணர்த்த அல், இல், ஆத் போன்ற
இடைநிலைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சான்று:
அல்
|
- |
மொழியல் |
(கோ.கோ. 10 : 2) |
இல் |
- |
அறிந்திலம் |
(கோ.கோ. 68 : 4) |
ஆத் |
- |
உறாது அறியாதவன் |
(கோ.கோ. 26 : 1)
(கோ.கோ. 28 : 4) |
ஓம், ஏன் என்ற விகுதிகளும் எதிர்மறை
வினையை
உணர்த்தப் பயன்படுத்தப்பட்டன.
சான்று:
ஓம்
|
- |
அடையோம் |
(கோ.கோ. 10 : 2) |
ஏன் |
- |
இரேன் |
(கோ.கோ. 29 : 3) |
6.3.6 எச்சங்கள்
வினைகளே பெயரெச்சமாகவும் வினையெச்சமாகவும்
செயல்படுகின்றன.
• பெயரெச்சம்
மராட்டியர் காலத் தமிழ் வினைப்பகுதிகள் அ, உம்
ஆகிய விகுதிகளைப் பெற்றுப் பெயர்களைக் கொண்டு
முடிந்துள்ளன.
சான்று:
அ |
- |
சிதைத்திட்ட |
(கோ.கோ. 46 : 2) |
உம் |
- |
இருக்கும் |
(கோ.கோ. 23 : 3) |
• வினையெச்சங்கள்
இ, உ ஆகிய விகுதிகள் வினைப்பகுதியின் எச்சங்களாக
வர வினையைக் கொண்டு முடிந்துள்ளன.
சான்று:
இ |
- |
தேடி |
(கோ.கோ. 16 : 3) |
உ |
- |
உற்று எண்ணாது |
(கோ.கோ. 21 : 3)
(கோ.கோ. 58 : 3) |
• நிபந்தனை எச்சங்கள்
ஒரு வினை நிபந்தனை எச்சமாக மாறுவதற்கு இன்,
அல்லது ஆல் என்ற விகுதியைப் பெற்று நிபந்தனை
எச்சமாகின்றது.
சான்று:
இன் |
- |
குறித்திடின் |
(கோ.கோ. 34 : 4) |
ஆல் |
- |
ஒழிந்தால் |
(கோ.கோ. 42 : 3) |
• குறையெச்சங்கள்
அ என்ற விகுதி குறையெச்ச விகுதியாக வருவதை
மராட்டியர் காலத் தமிழில் காணலாம்.
சான்று:
|
உற
மகிழ்ந்திட
|
(கோ.கோ. 21 : 4)
(கோ.கோ. 27 : 2) |
6.3.7 பால்காட்டும் வினை விகுதிகள்
தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற அம்மூவிடங்களிலும்
ஒருமை பன்மைப் பாகுபாட்டுடன் கூடிய வேறுவேறு
வினைவிகுதிகள் மராட்டியர் காலத்தில் பயன்படுத்தப்பட்டன.
• தன்மை
முதலாவது இடமான தன்மை, ஒருமை பன்மை என்ற
பாகுபாட்டைக் குறிக்கும் விகுதிகளையுடையது.
அ) தன்மை ஒருமை
தன்மை ஒருமை விகுதிகளாக அன், ஏன் என்ற
விகுதிகள் பயன் படுத்தப்பட்டுள்ளமையைக் காணமுடிகிறது.
சான்று:
சார்ந்தனன்
வருவன்
|
- |
அன் விகுதி |
(கோ.கோ. 12 : 3)
(கோ.கோ. 55 : 3) |
அறிவேன்
முடித்தேன்
|
- |
ஏன் விகுதி
|
(கோ.கோ. 9 : 3)
(கோ.கோ. 25 : 4) |
ஆ) தன்மைப் பன்மை
தன்மைப் பன்மை விகுதிகளாக அம், ஓம், தும் போன்ற
விகுதிகளை அக்காலக் கட்டத்தில் வழங்கிய தமிழில் காணலாம்.
சான்று:
கொண்டனம்
பழித்தனம்
|
- |
|
(கோ.கோ. 21 : 4)
(கோ.கோ. 58 : 4)
|
அடையோம் பெற்றோம் |
- |
ஓம் விகுதி |
(கோ.கோ. 10 : 2)
(கோ.கோ. 21 : 4) |
கூறுதும் அறிதும் |
- |
தும் விகுதி |
(கோ.கோ. 44 : 4)
(கோ.கோ. 47 : 2) |
• முன்னிலை
முன்னிலையிலும் ஒருமை, பன்மை என்ற வேறுபாடு
வேறுபட்ட விகுதிகளின் பயன்பாட்டால் அறிய முடிகிறது.
அ) முன்னிலை ஒருமை
ஐ, ஆய் என்பன முன்னிலை ஒருமையைக் குறிக்கப்
பயன்படுத்தப் பட்டுள்ளன.
சான்று:
ஒன்றினை
மொழியலை
|
- |
|
(கோ.கோ. 45 : 2)
(கோ.கோ. 48 : 4)
|
செய்தாய் கண்டாய் |
- |
ஆய் விகுதி |
(கோ.கோ. 43 : 3)
(கோ.கோ. 22 : 3) |
ஆ) முன்னிலைப் பன்மை
ஈர், உம் போன்ற விகுதிகள் முன்னிலைப் பன்மைக்குப்
பயன்பட்டு வேறுபடுகின்றன.
சான்று:
செய்தீர்
அறிவீர்
|
- |
ஈர் விகுதி |
சொல்லும் தேடும் |
- |
உம் விகுதி |
• படர்க்கை
படர்க்கை விகுதிகளைப் பயன்படுத்துவதன் மூலம் திணை
வேறுபாடு, பால் வேறுபாடு, ஒருமை பன்மை வேறுபாடு
ஆகியன நன்கு உணர்த்தப்பட்டன.
அ) படர்க்கை ஒருமை
படர்க்கை ஒருமையிலும் ஆண் பெண் வேறுபாட்டை
உணர்த்த வெவ்வேறு வினை விகுதிகள்
பயன்படுத்தப்பட்டுள்ளன.
(1) ஆண்பால்
(உயர்திணை)
இக்காலத் தமிழில் காணப்படுவதைப் போன்றே
அக்காலக் கட்டத்திலும் அன் விகுதி ஆண்பால் ஒருமையைக்
குறிக்கப் பயன்பட்டது.
சான்று:
|
என்றனன்
நிற்பன்
|
(கோ.கோ. 77 : 2)
(கோ.கோ. 59 : 3) |
(2) பெண்பால்(உயர்திணை)
அள், ஆள் ஆகிய இரு வினை விகுதிகளும் பெண்பால்
ஒருமையைக் குறித்து வழங்குவதைக் காணமுடிகிறது.
சான்று:
அள்
|
- |
|
(கோ.கோ. 63 : 4)
(கோ.கோ. 73 : 3)
|
ஆள் |
- |
சொல்கின்றாள்
தேடுவாள்
|
|
(3) ஒன்றன் பால் (அஃறிணை)
அஃறிணையில் ஒருமையைக் குறிக்க அது என்ற விகுதி பயன்
படுத்தப்பட்டுள்ளது.
சான்று:
வளர்த்தது
நிற்கின்றது
ஆ) படர்க்கைப் பன்மை
உயர்திணைப் பன்மையும் அஃறிணைப் பன்மையும் என
இரு பன்மைகள் படர்க்கையில் காணமுடிகின்றது.
(1) பலர்பால் (உயர்திணை)
உயர்திணையில் பலரைக் குறிக்க அர், ஆர் போன்ற
விகுதிகள் பயின்று வந்துள்ளன.
சான்று:
அர்
|
- |
நீங்குவர்
சாற்றுவர் |
(கோ.கோ. 28 : 2)
(கோ.கோ. 30 : 4)
|
ஆர் |
- |
தந்தார்
வருவார்
|
(கோ.கோ. 37 : 4)
(கோ.கோ. 31 : 4) |
(2) பலவின் பால் (அஃறிணை)
ஓரிரு இடங்களில் மட்டுமே பலவின்பாலைக் குறிக்க
அ விகுதி பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களைக் காணமுடிகிறது.
சான்று:
கண்டன
கேட்டன
மேற்கண்ட இலக்கணக் கூறுகளின் மாற்றங்களே அன்றி
வேறு சில மாற்றங்களும் காணப்படுகின்றன. நிகழ்கால
விகுதியான கிறு அஃறிணை வினைமுற்றுச் சொற்களில்
கெட்டுவிட்டது.
சான்று:
தோன்றுகிறது
|
> |
தோன்றுது |
பாய்கிறது |
> |
பாயுது |
செய்யேன் என்ற வாய்பாட்டு எதிர்மறை வினைமுற்று மறைந்து,
செய்ய மாட்டேன், செய்யவில்லை என்ற வாய்பாட்டு
எதிர்மறை வினைகள் மிகுதியாக வழக்கத்திற்கு வரத்
தொடங்கிவிட்டன.
|