5.5 பிற மொழிகளில் தமிழ் தமிழில் பிற மொழிச் சொற்கள் கலந்தது போலவே பிற மொழிகளிலும் தமிழ்ச் சொற்கள் கலந்துள்ளன. மனித இன வரலாற்றில் பல்வேறு மொழியாளர்கள் ஒன்றி உறவாடிக் கலந்திருந்த வரலாறும் உண்டு. இதனை நாகரிக ஊடுருவல் (Cultural Diffusion) என்பர். தமிழகம் அரசாட்சியிலும் வணிகத்திலும் சிறந்து விளங்கிய நாடு ஆகும். ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்பது தமிழ்க் கொள்கை. எனவே வணிகத்தின் மூலம் தொடர்பு கொண்டனர். விளைவாக, உலகின் பல பாகங்களில் தமிழர்கள் வாழ்கின்றனர். சில நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாகவும் உள்ளது. கிரேக்கம், ஹீப்ரு போன்ற தொன்மையான மொழிகளிலும் கூடத் தமிழ்ச் சொற்களைக் காண இயலுகிறது. வடமொழியிலும் ஆங்கிலம் போன்ற உலக மொழியிலும் தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன. இத்தகைய தமிழ் மொழிக் கலப்பு வேற்று நாட்டினருடன் தமிழர்கள் கொண்டிருந்த தொடர்பையும் தமிழரின் நாகரிக வாழ்வையும் நமக்குப் புலப்படுத்துகிறது. தமிழ்ச் சொற்கள் வடமொழியில் கலந்துள்ளமை பற்றி டாக்டர் கால்டுவெல்லும் டாக்டர் T. பர்ரோவும் விரிவாக எழுதுகின்றனர். நீர், மீன், மின் போன்ற பல தமிழ்ச் சொற்களை வடமொழியில் காணலாம். வடமொழியில் காணப்படும் தமிழ்ச்சொற்கள் பின்வருவன : • தமிழ்-சமஸ்கிருதம்
முதலியன சில சான்றுகள். இலங்கையின் ஒரு பகுதி பல நூற்றாண்டுக் காலமாகத் தமிழ் நிலமாக இருப்பதால் சிங்கள மொழியில் தமிழ்ச் சொற்கள் காணப்படுவது இயற்கையே. இலங்கைக் கல்வெட்டில் பெருமகன் முதலான தமிழ்ச் சொற்கள் இருப்பதைப் பேரா. தெ.பொ.மீ குறிப்பிடுகிறார். சிங்கள மொழியில் குடி, கூலி, பெருமகன், கல், பெட்டி, நங்கை, அம்மா போன்ற சொற்களைக் காணலாம். கிரேக்க நாட்டிற்கும் பழந்தமிழகத்திற்கும் வணிகத் தொடர்பு இருந்ததை வரலாற்றின் மூலம் அறிகிறோம். கிரேக்கச் சொற்களைத் தமிழிலும் தமிழ்ச் சொற்களைக் கிரேக்க மொழியிலும் காண்கிறோம். கிரேக்க மொழியில் காணப்படும் தமிழ் இடப் பெயர்கள், வரலாற்றை அறிய உதவுகின்றன.
பழந்தமிழகத்திற்கும் பாபிலோனிற்கும் வணிகத் தொடர்பு இருந்தது. இது சேஷ அய்யங்கார் எழுதிய திராவிட இந்தியா (Dravidian India) என்ற நூலின் மூலம் விளக்கமாகத் தெரிகிறது. நம் நாட்டினின்று ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களுக்கு நம் நாட்டில் வழங்கப்பட்ட பெயரையே வழங்கினர். காகம், மயில் இவ்வகையில் அங்குச் சேர்ந்த சொற்கள். சுமேரியத் தலைநகரான ஊர் என்ற சொல் நமது ஊர் என்ற சொல்லுடன் தொடர்புபடுத்திக் காட்டத் தக்கது. தோகை என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து ஹீப்ருவில் வழங்கும் துகி என்ற சொல் (பொருள்: மயில்) வந்திருக்கக் கூடும் என்பர் அறிஞர்கள். மயில்தோகை, தேக்கு, ஊர் போன்ற சொற்கள் அம்மொழியில் வழங்குகின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே சீனாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் தொடர்பு இருந்து வந்திருப்பதை வரலாறு பேசுகிறது. கி.மு. முதலாம் நூற்றாண்டிலிருந்தே முத்து போன்ற விலையுயர்ந்த பொருள்கள் சீனாவுக்குச் சென்றன என அறிகிறோம். காஞ்சி என்ற சொல்தான் houang - tche என்ற சொல்லாகச் சீன மொழியில் மாறியிருக்கலாம் என்பது வரலாற்றுப் பேரறிஞர் நீலகண்ட சாஸ்திரியாரின் கருத்து ஆகும். தமிழ் மொழிக்கும் சப்பானிய மொழிக்கும் பல்வேறு வகைகளில் உறவு உண்டு என்பது குறித்து அறிஞர்கள் சுசுமு ஓனோவும் சுசுமுசிபாவும் ஆராய்ந்துள்ளனர். இம்மொழிகளுக்குள்ள உறவு இன்னும் விரிவாக ஆராயத்தக்கது.
போன்றவை சான்று. உலக மொழியாகத் திகழும் ஆங்கிலம் தமிழில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தித் தன் சொற்களைக் கடன் வாங்கச் செய்திருக்கிறது. ஆங்கிலேயர்கள் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தனர். நான்கு நூற்றாண்டுக் காலத் தொடர்பு தமிழ்ச் சொற்களை ஆங்கில மொழியில் புகுத்தியும் உள்ளது. நம் நாட்டுப் பொருள்களைக் குறிக்கவும், பண்பாட்டை விளக்கவும், செடி, கொடி, விலங்குகள் முதலியவற்றைக் குறிப்பதற்கும் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டிய சூழல் அவர்களுக்கு ஏற்பட்டது. சில சான்றுகள் பின்வருமாறு:
மொழிக்கு மொழி இவ்வாறு சொற்களைக் கடன் வாங்குவது தவிர்க்க முடியாத ஒன்றாக அமைகிறது. கடன் வாங்கல் பற்றிய ஆய்வு விரிந்த அளவில் செய்யப்பட வேண்டும். |