|   பொதுவாக, இலக்கியம் என்பது நாட்டு மக்களின்
 வாழ்க்கையைக் காட்டும் கண்ணாடி என்று கூறுவர். இங்குக்
 கிராம மக்களின் வாழ்க்கை முறைகளையும், பழக்க
 வழக்கங்களையும் படைப்புகளையும் குறித்த இலக்கியமே
 நாட்டுப்புறவியல் இலக்கியம் ஆகும். நாட்டுப்புறவியல்
 என்றால் 
 என்ன என்பது பற்றிய செய்திகள் இங்குத் தொகுத்துக் 
 கூறப்பட்டுள்ளன.  |