|   
 கடந்த காலத்தின் நீட்சி நிகழ்காலம். நிகழ்காலத்தின் நீட்சி
 எதிர்காலம். இத்தகு மூன்று காலங்களிலும் நிற்கும் சிறப்பினை
 உடைய இலக்கியம் வந்த வழியினைக் கூறுவது இலக்கிய
 வரலாறு.
 இங்குத் தமிழக நாட்டுப்புறவியல் என்ற இலக்கிய 
 வடிவத்தின்
 தோற்றத்தையும், வளர்ச்சியையும் கால
 அடிப்படையிலும்
 (Periodical Method) ஆராய்ச்சி குறித்த 
 சிந்தனைகளைப்
 புலப்பாட்டு நெறியினாலும்  (Rhetoric 
 Method)
 அறிந்து
 கொள்வதாக அமைவது இப்பாடப்பகுதி.
  |