தன் மதிப்பீடு : விடைகள் - I

3. இராமாயணக் கதையை விடப் பாரதக் கதை நிகழ்வுகள் அதிகமாகப் புராணக் கதைப்பாடல்களில் இடம்பெற்றுள்ளன ஏன்?

மகாபாரதத்தில் கதை மதிப்புடைய பல கிளைக் கதைகள் உள்ளன. ஒவ்வொரு கதையும் தன்னளவில் தனித்த கதையாகவும் விளங்கும் தன்மையுடையது. மூலக்கதையில் காணப்படும் பல்வேறு திருப்பங்கள், பங்காளிச் சண்டை, கதைப்பாத்திரங்கள் நல்லதும் கெட்டதும் கலந்த தன்மையில் இருத்தல், இவற்றோடு சேர்த்துப் பாரதக் கதைகளில் வரும் வீர சாகசங்கள், மாயா ஜாலச் செயல்கள் ஆகியன மக்களைப் பிரமிப்பில் ஆழ்த்தத் துணை செய்கின்றன. இத்தகைய பன்முக மதிப்புகள் இராமாயணத்தில் இல்லை. இவையே புராணக் கதைப்பாடல்களில் மகாபாரதக் கதைகள் அதிகமாக இடம் பெறுவதற்குரிய காரணங்களாகும்.