இந்தப் பாடம் விடுகதை என்றால்
என்ன என்பதையும், விடுகதைகள் எவ்வாறு
சேகரிக்கப்பட்டுப் பதிப்பிக்கப்
படுகின்றன என்பதையும் எடுத்துரைக்கிறது. விடுகதைகளின்
வகைகளைக் கூறுவதோடு, அவை இயற்றப்படும் சூழலையும்
பயனையும் குறிப்பிடுகின்றது.
இந்தப்
பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
தமிழ் நாட்டுப்புற இலக்கிய வகைகளுள் தமிழர்களின் அறிவுத்திறன்
வெளிப்பாடாக விளங்கும் விடுகதைகளை இனம் பிரித்து அறிய
இயலும்.
தமிழகத்தில்
பண்டைக் காலம் முதல் இன்றுவரை விடுகதைகளைச் சுட்டுவதற்கு
என்னென்ன சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன-வருகின்றன
என்பதை அறிய இயலும்.
விடுகதைகளின்
சேகரிப்புப் பணி பற்றியும் சிறந்த விடுகதைத் தொகுப்புகள்
பற்றியும் அறியலாம்.
விடுகதைகளின்
வகைகளை அறிந்து அவற்றின் சிறப்புகளையும் இலக்கியச்
சுவையையும் அறிந்து பயன் பெறலாம்.
விடுகதைகள்
தமிழகத்தில் எவ்வெச் சூழல்களில் பயன்படுத்தப்படுகின்றன
என்பதையும் அவற்றின் பயன்களையும் உணரலாம்.
சமுதாயத்தைப்
புரிந்து கொள்வதற்கு விடுகதைகள் எவ்வாறு துணை செய்யும்
என்பதை அறியலாம்.
புதிய செய்திகளை, சிறுவர்களுக்கு உணர்த்துவதற்கு,
புதிய விடுகதைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடலாம்.