| தன் 
 மதிப்பீடு : விடைகள் - I | 
| 1. பாரதி 
 புதுவை செல்ல நேர்ந்தமைக்குரிய காரணம் யாது? | 
| ஆங்கில ஆட்சிக்கு எதிரான செய்திகளை ‘இந்தியா’ பத்திரிகையில் வெளியிட்டது; ஆங்கிலேயருக்கு எதிரான அயர்லாந்து விடுதலை அமைப்பின் தடை செய்யப்பட்ட புரட்சி ஏட்டை இரகசியமாக வரவழைத்தது ஆகிய காரணங்களுக்காக ஆங்கிலேய அரசு பாரதியைக் கைது செய்ய முடிவு செய்தது. அரசின் பிடியில் சிக்காமல் இருப்பதற்காக, பாரதி புதுவை செல்ல நேர்ந்தது. |