பாரதியின் உள்ளம் பரந்தது. அனைத்தையும் தழுவிச்
செல்லும் தன்மை வாய்ந்தது. மக்கள் மீதான பாரதியின்
அளப்பரிய அன்பும் அக்கறையும் அவரை உலகளாவிய
நோக்குடையவராக உருவாக்கியது.
பாரதியின் உலக நோக்கிற்கு வலிமை சேர்த்தது பாரதியின்
புதிய அத்வைதக் கோட்பாடு. அதற்கு மேலும் உரமூட்டியது
மேலை நாட்டுக் கவிஞர்களின் உலகளாவிய சிந்தனைகள்.
இதன் விளைவாக விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம்
ஆகிய முப்பெரும் கோட்பாடுகளைத் தன்வயப்படுத்திக்
கொண்டார் பாரதி.
இவையனைத்தும் இப்பாடத்தில் விளக்கப்படுகின்றன.
|