|  
  குடும்ப 
 வேலைகளைச் செய்து கொண்டிருந்த வேளையில் அந்தத்
 தலைவிக்குப் பிள்ளைகளின் நினைவு தோன்றியது. 
 பள்ளிக்
 கூடத்திற்குச் சென்ற பிள்ளைகளில் சிறிய பையன், துள்ளி ஓடும்
 இயல்பைக் கொண்டவன். ‘அவன் மான் போல் துள்ளி ஓடும்போது
 எங்கேனும் விழுந்து அடிபட்டு விடுமோ?’ என்று அஞ்சினாள். 
 
 ‘பெரிய பையனும் அதே பள்ளிக் கூடத்தில்தான் படிக்கிறான்; அவன்
 கவனித்துக் கொள்வான்’ என்று நினைத்து ஆறுதல்பட்டுக் 
 
 கொண்டாள். 
 குடும்ப 
 வேலைகளுக்கு இடையே ஒரு தாய்க்குத் தனது பிள்ளைகள்
 பற்றிய எண்ணம் வருவது இயல்பு. அந்த இயல்பான தன்மை
 கெடாமல் தலைவிக்கு எழுந்த பிள்ளைகளின் 
 நினைவை
 வெளிப்படுத்தியுள்ளதைப் பாரதிதாசன் கவிதையில் காணமுடிகிறது.  
  |