|  
  மகனுக்குத் 
 திருமணம் செய்து வைத்த
 பெற்றோர் மகன் வீட்டிலேயே தங்கி
 வாழ்கின்றனர். அவ்வாறு வாழ்கின்ற 
 அவர்கள் தங்கள் மகள் வீட்டிற்குச் 
 செல்ல விரும்பிச் செல்கிறார்கள். சில
 நாள் அங்கே இருந்துவிட்டுத் 
 
 திரும்பியவர்கள் அங்கே கிடைத்த
 அரிய பொருள்களைப் பார்த்து
 வாங்கி வருகிறார்கள். அந்தப் பொருள்களின் 
 பட்டியலைப் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்
 பாருங்கள்!
 கும்பகோணத்துக் கூசா, மஞ்சள், குங்குமம், கண்ணாடி, மை வைத்த
 தகரப் பெட்டி, செஞ்சாந்தின் சீசா, செம்பு, வெற்றிலைச் சீவல் பெட்டி,
 இஞ்சி மூட்டை ஒன்று, ஒரு கோணிப்பை நிறைய எலுமிச்சை, நான்கு
 புதிய தவலைகள், பொம்மைகள், இரும்புப் பெட்டி, மிதியடிக் கட்டை,
 பிள்ளை விளையாட மரச் சாமான்கள், நெல் குத்து மரக்குந்தாணி
 இரண்டு, தலையணை, மெத்தைக்கட்டு, சல்லடை, புது முறங்கள்,
 எலிப்பொறி, தாழம்பாய்கள், இலுப்பை எண்ணெய், கொடுவாய்க் 
 
 கத்தி, இட்டலித் தட்டு, குண்டான், கலப்படம் 
 இல்லாத
 நல்லெண்ணெய், கைத்தடி, செந்தாழம்பூ, முக்காலி, பச்சரிசி மாங்காய்,
 விளக்குமாறு, பாதாளச் சுரடு, தேங்காய், குடை, மூக்குக் கண்ணாடி
 முதலிய பொருட்களுடன் பெற்றோர் வந்தனர்.  
  
  |