|   4.7 
 இசைப் பாடல்களில் சந்த நயம் 
   | 
  E | 
 
  
 |  
  பாவேந்தர் 
 பாரதிதாசனின் இசைப்பாடல்கள் இசைக்கு ஏற்ப
 அமைந்துள்ளன. மேலும் சந்த நயம் மிகும் வகையில் பல ஒலி
 நயங்களையும் கொண்டுள்ளன.  
  | 
 
  
 |    
 
  தமிழ்நாடு 
 தான் மேலான நாடு  
  தமிழர்க்கெல்லாம் மற்றவை காடு  
 
  | 
 
  
 |  
  
 என்னும் பாடலின் இரு அடிகளின் இறுதி எழுத்துகளும் 
 ‘டு’
 என்னும் எழுத்தாய் அமைந்து ‘நாடு’, ‘காடு’ என்று ஓர் இயைபை
 வழங்குவதைக் காணமுடிகிறது. மேலும் இப்பாடலின் 
 இரு
 அடிகளிலும் முதல் எழுத்து ‘த’ என்னும் ஒரே 
 எழுத்தாய் 
 அமைந்து ஒலிப்புக்கு இனிமையைக் கூட்டுகிறது.  
  
  | 
 
  
 |   
 எங்கள் 
 வாழ்வும் எங்கள் வளமும்  
  மங்காத தமிழென்று சங்கே முழங்கு  
   | 
 
  
 |  
  
 என்னும் பாடல் வரிகளில் ‘எங்கள்’ ‘மங்காத’ என்னும் சொற்களில்
 ‘ங்’ என்னும் எழுத்து இடம் பெற்று, சந்தம் 
 தருவதைக் 
 காணமுடிகிறது. இதைப் போன்றே முதல் அடியின் மூன்றாம் 
 
 சொல்லிலும் இரண்டாம் அடியின் மூன்றாம் சொல்லிலும் 
 ‘ங்’ 
 என்னும் எழுத்து அமைந்து ஒலி நயத்தைக் கூட்டுகிறது. இவை 
 போன்றே பாரதிதாசனின் இசைப்பாடல்கள் சந்த 
 நயம் 
 வழங்குவதைக் காணுங்கள்.  
  |